ராஜஸ்தான், ம. பி., சத்தீஸ்கரில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜக - இந்தியா டுடே எக்ஸிட் போல்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் பாஜகவுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. நவம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை சட்டசபை தேர்தலை சந்தித்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களில் இந்தியா டுடே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை நடத்தியது.
இதில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. தற்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கும் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் பாஜக தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தானில் அசோக் கெஹ்லாட் அரசு மீண்டும் பதவிக்கு வராது என்றும், காங்கிரஸ் கடந்த தேர்தலில் பெற்றதை விட இந்த தேர்தலில் 4 சதவீத வாக்குகள் குறைவாக பெற்றிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துக்கணிப்பில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர் வசுந்தரா ராஜிக்கு பெரிதாக வாக்குகள் கிடைத்துவிடவில்லை. அவருக்கு 41 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே சமயம் கெஹ்லாட்டுக்கு 39 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறும் என்றாலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 5 இடங்களை குறைவாகவே பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
சிவராஜ் சிங் சவ்கான் மீண்டும் மத்திய பிரதேச முதல்வராக வேண்டும் என்று 61 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். சத்தீஸ்கரில் ஆளும் பாஜக முதல்வர் ராமன் சிங் மூன்றாவது முறையாக முதல்வர் ஆவார் என்று கூறப்படுகிறது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு கூடுதலாக 40 முதல் 42 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications