இஷ்ரத் என்கவுன்ட்டர்: குஜராத் போலீஸ் மீதான கிரிமினல் வழக்குகளை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்யுமா?
டெல்லி: இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் தொடர்பாக குஜராக் போலீஸ் அதிகாரிகள் சிலர் மீதான கிரிமினல் வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரும் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்ப்ராவை சேர்ந்த இளம்பெண் இஷ்ரத் ஜஹான் மற்றும் 3 ஆண்கள் கடந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி குஜராத்தில் நடந்த என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். தீவிரவாதிகளான அவர்கள் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டமிட்டதால் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இஷ்ரத் உள்ளிட்டவர்கள் அப்பாவிகள் என்றும், குஜராத் போலீசார் போலி என்கவுன்ட்டர் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த என்கவுன்ட்டர் உண்மையா இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இது குறித்த வழக்கு அகமதாபாத்தில் உள்ள மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று அகமதாபாத் மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம் 2009ம் ஆண்டு தெரிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து குஜராத் அரசு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இஷ்ரத் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வந்த சிறப்பு குழு அந்த என்கவுன்ட்டர் போலி என்றும், குறிப்பிட்ட தேதிக்கு முன்பே அந்த 4 பேரும் கொல்லப்பட்டதாக 2011ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. குஜராத் போலீசார் திட்டமிட்டே என்கவுன்ட்டர் நடத்தியதாகக் கூறி 2013ம் ஆண்டு ஜுலை மாதம் 13ம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இது குறித்து சில போலீஸ் அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த சூழலில் இஷ்ரத் ஜஹான் லஷ்கர் இ தொய்பா தீவரிவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி என 26/11 மும்பை தாக்குதல் வழக்கில் வாக்குமூலம் அளித்த தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்தார்.
இதையடுத்து இஷ்ரத் விவகாரம் குறித்து குஜராத் போலீஸ் அதிகாரிகள் சிலர் மீதான கிரிமினல் வழக்குகளை ரத்து செய்யுமாறு வழக்கறிஞர் எம்.எல். சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
இஷ்ரத் ஜஹான் வழக்கில் குஜராத் நீதிமன்றத்தில் போலி அபிடவிட் தாக்கல் செய்தது தொடர்பாக முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியவரும் இதே சர்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications