Jan Ki Baat Exit Polls: செம பெர்பாமன்ஸ் செய்த காங்கிரஸ்! பாஜகவுக்கு ஷாக் கொடுத்த வாக்காளர்கள்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியே பெரும்பான்மை பலத்தை பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என ஜன் கீ பாத் எக்ஸிட் போல் கணிப்பு கூறுகிறது.
சத்தீஸ்கரில் உள்ள 90 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் 958 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்களில் 827 ஆண்களும், 130 பெண்களும் ஒரு திருநங்கையும் உள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளில் 51 தொகுதிகளை பெற்றது. பாஜக வெறும் 13 இடங்களில் மட்டுமே வென்றது. ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் 4 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வென்றது. அதன்பிறகு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சில இடங்களில் வென்றது.
சத்தீஸ்கரில் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பிலாஸ்பூர் பகுதியில் பல தொகுதிகளில் காங்கிரஸ், பாஜகவுடன் ஆம் ஆத்மியும் இணைந்து மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகிறது.
அதற்கு முன்பு தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் என இரு கணிப்புகள் வெளியாகும். அந்த வகையில் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் (Exit polls) வெளியாகியுள்ளன. அதில் ஜன் கீ பாத் நிறுவனம் எடுத்த சர்வேயில் காங்கிரஸ் கட்சி 47 இடங்களிலும் பாஜக 37 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த முறை காங்கிரஸ் கட்சியே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்புகளும் தேர்தல் முடிவுகளுக்கு ஓரிரு இடங்கள் வித்தியாசத்தில் இருக்கும். பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியே வெல்லும் என கணித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications