ஜெ. வழக்கில் அப்பீல் செய்ய வேண்டும்: சொல்வது கர்நாடக பாஜக மாஜி துணை முதல்வர்
பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்டில் அப்பீல் செய்ய வேண்டும் என்று கர்நாடக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈஸ்வரப்பா இன்று கூறுகையில், ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். ஜெயலலிதா மீதுள்ள புகார் சிறு தொகை தொடர்பானது கிடையாது. கோடிக்கணக்கான ரூபாய் தொடர்புள்ள முறைகேடு புகார் அவர் மீது உள்ளது.

ஊழல் வழக்கில் எளிதில் விடுதலை நிகழுமானால், ஊழலை செய்வோருக்கு அச்சம் போய்விடும். நாட்டில் ஊழலும், முறைகேடுகளும் பெருகி மக்கள் அவதிப்படுவார்கள்.
சட்ட வல்லுநர்கள், கர்நாடக அரசை மேல்முறையீடு செய்ய கேட்டபிறகும், கர்நாடக அரசு காலம் கடத்துவது ஏன் என்று புரியவில்லை. மேல்முறையீடு செய்யாவிட்டால், காங்கிரஸ் கட்சி ஏதோ பெரிய தவறு செய்துள்ளது, எனவேதான், இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய தயங்குகிறது என்று மக்கள் சந்தேகப்படுவார்கள். இவ்வாறு ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
தமிழக பாஜக ஜெயலலிதாவிடம் நெருங்கி வருகிறது. அதன் அடையாளமாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா போன்றோர் ஜெயலலிதாவின் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அகில இந்தியத் தலைமையும் கூட நெருக்காமாகவே உள்ளது. மோடியே, ஜெயலலிதாவுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாஜகவின் இல.கணேசனும், இந்த வழக்கில் மேல்முறையீடு தேவையில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் கர்நாடக பாஜகவைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் அப்பீல் தேவை என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications