For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. வழக்கில் சுப்ரீம் கோர்ட் செல்ல கர்நாடகாவுக்குதான் உரிமை: அட்வகேட் ஜெனரல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில், அப்பீல் செய்யும் உரிமை கர்நாடக அரசுக்கு மட்டுமே உள்ளதாக அம்மாநில அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார் கூறினார்.

இதுகுறித்து 'ஒன்இந்தியாவுக்கு' ரவி வர்மகுமார் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது: ஜெயலலிதா அப்பீல் வழக்கில், கர்நாடகாவை வாதியாக சேர்க்காததை கடுமையாக எதிர்த்துதான், எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்திருந்தோம்.

Jaya verdict- Only Karnataka can file appeal says Advocate General

வழக்கு கர்நாடகாவில் நடைபெற்றுள்ளதால், கர்நாடகா மட்டும்தான், உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய முடியும். இருப்பினும், அப்பீல் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துதான் தற்போது ஆய்வு நடந்து வருகிறது. எப்போது அப்பீல் செய்யப்படும் என்பது குறித்து எந்த காலவரையறையும் வைத்துக்கொள்ளவில்லை.

தீ்ர்ப்பின் சாதக, பாதக அம்சங்களை ஆய்வு செய்து வருகிறோம். அதன் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ரவிவர்ம குமார் கூறினார்.

English summary
The Karnataka government will hold a series of meetings to decide on how to go about the appeal to be filed in connection with the J Jayalalithaa case. In the wake of her acquittal before the Karnataka High Court, the state is contemplating an appeal before the Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X