Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூமியில் புதையும் ஜோஷிமத்! சிவலிங்கத்தில் விரிசல்.. மிக பெரிய அச்சுறுத்தல் என ஆச்சாரியார்கள் கருத்து

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகாண்டின் ஜோஷிமத் நிலச்சரிவின் எதிரொலியாக சங்கராச்சாரிய மாதவ் ஆசிரமத்தில் உள்ள சிவலிங்கத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள சம்பவம் பக்தர்களை கவலையடையச் செய்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள மலையோர நகரமாக அறியப்படுகிறது ஜோஷிமத். இந்த நகரம் தற்போது பூமிக்குள் புதைந்து கொண்டே வருகிறது. இந்த பகுதியில் அடிக்கடி நிலச்சரிவுகளும் நிலநடுக்கங்களும் ஏற்படுவது வாடிக்கை.

ஆனாலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த சில நாட்களாக ஜோஷிமத் பகுதியில் பெரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அங்குள்ள பல வீடுகள் மண்ணில் புதைந்து வருகின்றன. 600-க்கும் மேற்பட்ட வீடுகளும் சாலைகளும் புதைந்து வருகின்றன.

ஜோஷிமத் நகர்

ஜோஷிமத் நகர்

இந்த நிலையில் ஜோஷிமத் நகரில் உள்ள ஒரு கோயில் நேற்று முன் தினம் இடிந்து விழுந்தது. இதையடுத்து பொதுமக்கள் விரிசல் விழுந்த தங்களது வீடுகளை காலி செய்து கொண்டு இரவு முழுவதும் கடும் குளிரில் மைதானங்களில் தங்கியிருந்தனர். ஜோஷிமத் நகரில் 3000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

40 குடும்பத்தினர்

40 குடும்பத்தினர்

40 குடும்பத்தினர் இதுவரை ஜோஷிமத் நகரை விட்டு இடம்பெயர்ந்து விட்டனர். 500-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஜோஷிமத் நகரமே பூமியில் புதையும் நிலை உருவாகியுள்ளது. ஜோஷிமத் நகரிலிருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள கர்ணபிரயாக் நகரிலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவுகள்

நிலச்சரிவுகள்

இதனிடையே ஜோஷிமத் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் அங்குள்ள பகவதி கோயில் சேதம் அடைந்துவிட்டது. இப்போது சங்காச்சாரிய மாதவ் ஆசிரமத்தில் உள்ள சிவலிங்கத்திலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அது போல் லட்சுமி நாராயணர் கோயிலிலும் சுவர்களில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

சிவலிங்கத்தில் விரிசல்

சிவலிங்கத்தில் விரிசல்

இதுகுறித்து ஜோதிர்மடத்தை சேர்ந்த சங்கராச்சாரிய சுவாமி ஆவி முக்தேஷ்வரானந்த் கூறுகையில் கோயில் சிவலிங்கத்திலேயே விரிசல் ஏற்பட்டுள்ளது கண்டு கவலையாக இருக்கிறது என்றார். சிவலிங்கத்தில் விரிசல் ஏற்பட்டதன் மூலம் ஜோஷிமத் நகரத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என பண்டிதர்கள் கூறுகிறார்கள். ஆன்மீக நகரான ஜோஷிமத்தின் நிலைமை கவலையளிப்பதாக சமூகஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

சாலைகளில் பிளவுகள்

சாலைகளில் பிளவுகள்

சாலைகளில் செங்குத்தாக பிளவுகள் ஏற்படுகின்றன. நீரோடைகளில் நீர் கொதிக்கிறது. ஒட்டுமொத்த நகரமே புதைந்து கொண்டிருக்கிறத. இந்த இயற்கை பேரிடரை பார்க்கும் போது மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளார்கள். கண் முன்னாலேயே வீடுகள் சீட்டு கட்டு போல் சரிந்து விழுகின்றன. ஜோஷிமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதற்கு காரணம், அங்கு அமைக்கப்பட்டு வரும் நீர் மின் நிலைய கட்டுமானமும் பத்ரிநாத்திற்கு செல்லும் பாதை கட்டுமானமும்தான் காரணம் என பலர் சொல்கிறார்கள்.

கொப்பளிக்கும் தண்ணீர்

கொப்பளிக்கும் தண்ணீர்

ஆனால் இவற்றில் எந்த உண்மையும் இல்லை என்கிறார்கள். அவர்கள் சொல்வது என்னவெனில் மலைப்பாங்கான பகுதிகளில் சீனா கட்டுமானப் பணிகளையும் வளர்ச்சித் திட்டங்களையும் செய்து வருவதால்தான் இப்படி நடக்கிறது என்கிறார்கள். இல்லாவிட்டால் இதுவரை இப்படி நடந்ததே இல்லை என்பதும் அவர்களுடைய கருத்தாக உள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன்பே வார்னிங்

50 ஆண்டுகளுக்கு முன்பே வார்னிங்

ஆனால் நிபுணர்கள் கூறுகையில் ஜோஷிமத் நிலச்சரிவில் சிக்கும் என 50 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை செய்யப்பட்டுவிட்டது. ஆனால் அது குறித்து யாருமே கவலை கொண்டதாக தெரியவில்லை. தற்போது ஜோஷிமத் மிகவும் மோசமாக உள்ளது. ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக சேதமடைந்துவிட்டன. சுருக்கமாக சொல்ல போனால் ஜோஷிமத் நிலப்பரப்பே மோசமான அமைப்பை கொண்டுள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+