சூப்பர்.. விவாகரத்து பெற்ற மகளை.. மேள தாளத்துடன் வரவேற்ற அப்பா.. ஊரெல்லாம் இதே பேச்சா இருக்காமே
கான்பூர்: கணவனிடம் விவாகரத்து வாங்கிக்கொண்டு வந்த மகளை, மேளதாளங்களுடன் வரவேற்றுள்ளார் பெற்ற தந்தை.. இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் அனில்குமார்.. டெல்லி பாலம் ஏர்போர்ட்டில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.. இவரது மகள் பெயர் ஊர்வி.. 36 வயதாகிறது.. இவரும் கம்ப்யூட்டர் என்ஜினியர் படித்தவர்.

திருமணம்: கடந்த 2016ம் ஆண்டு இவர்களுக்கு கல்யாணம் நடந்தது... ஒரு பெண் குழந்தை இவர்களுக்கு உள்ளது.. தற்போது டெல்லியிலேயே வசித்து வருகிறார்கள்.. இந்நிலையில், ஊர்வியின் மாமியார் வீட்டில் வரதட்சணை பிரச்சனை வெடித்தது.. நாளுக்கு நாள் வரதட்சணை கொடுமைகளும் ஊர்விக்கு அதிகமாகின.. இதனால், கணவன் - மனைவிக்குள் நாளுக்கு நாள் அடிக்கடி தகராறும், சண்டைகளும் அதிகமாகி கொண்டே வந்தன..
ஒருகட்டத்தில் பொறுமையிழந்த ஊர்வி, கணவனை பிரிய முடிவு செய்து, விவாகரத்து கோரினார்.. இதுநாள்வரை குடும்ப நல கோர்ட்டில் இந்த கேஸ் நடந்து கொண்டிருந்தது.. இப்போது, விசாரணைகள் முடிந்த நிலையில், கடந்த 28ம் தேதி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

அனில்குமார்: இந்த விவாகரத்து பெற்றதில், ஊர்வியைவிட அவரது அப்பா அனில்குமாருக்குதான் மகிழ்ச்சி அதிகமாகிவிட்டது.. விவாகரத்து பெற்ற மகளை, கான்பூரில் இருக்கும் மாமியார் வீட்டிலிருந்து, தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வர முடிவு செய்தார்...
அதாவது, கல்யாண தினத்தன்று, மணக்கோலத்துடன் மகளை எப்படி மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்தாரோ, அதுபோலவே, விவாகரத்து ஆன பிறகும், மகளை மகிழ்ச்சியாக வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்தார்.. இதற்காக, கல்யாணத்தன்று ஏற்பாடு செய்யப்பட்ட, டிரம்ஸ், மேள தாள வாத்தியங்கள் முழங்க, தன்னுடைய வீட்டிற்கு மகளை அழைத்துவந்தார் அனில்குமார்.
ஊழியர்: அனில்குமார் பிஎஸ்என்ல் ஊழியராவார்.. தன்னுடைய மகளை பற்றி அனில் குமார் சொல்லும்போது, "புகுந்த வீட்டிற்கு அனுப்பியதை போலவே, இப்போதும் நாங்கள் அவளை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தோம்... காரணம், அவளது வாழ்க்கையை புதிதாக தொடங்க வேண்டும் என்று விரும்புகிறோம்.. சமூகத்திற்கு ஒரு நேர்மறையான செய்தியை தர வேண்டும் என்பதற்காகவே, என் மகளை இப்படி வரவேற்று அழைத்து வந்தேன்.
எனவே, "கல்யாணம் செய்து அனுப்பிவிட்டு, அத்துடன் மகளின் வாழ்க்கை முடிந்ததுதான்" என்று எத்தனையோ பெற்றோர்கள் மனம்புழுங்கி கொண்டிருக்கிறார்கள்.. அவர்களுக்கு நான் சொல்வது, மகள்களை திருமணத்திற்கு பிறகும் புறக்கணிக்காமல் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்பதுதான்.
சபாஷ்: ஆனந்த குமார் வீட்டு தெருவில் மேளதாளம் சத்தம் கேட்டதுமே, அந்த பகுதி மக்கள் குழம்பி போயிருக்கிறார்கள்.. விவாகரத்து பெற்ற மகளுக்கு வரவேற்பா? என்று அதிர்ச்சியும் அடைந்தனர்.. அதற்கு பிறகுதான் விஷயம் புரிந்துள்ளது.. ஊர்வியை அந்த பகுதி மக்களும் சேர்ந்து வரவேற்றிருக்கிறார்கள்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகியுள்ளது... அத்துடன் அனில்குமாருக்கும் பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.
குழந்தைகளுக்கான நல்ல பாதுகாப்பான சூழல், பெற்றோர்களை தவிர வேறு எங்குமே அவர்களுக்கு கிடைத்து விடாது என்பதை மறுக்க முடியாது.. எனவே "ஈகோவால்" முளைக்கும் விவாகரத்துகள் தவிர்க்கப்படலாம்.. அதேசமயம், பிடிக்காத ஒன்றை சகித்து கொண்டு வாழ்வது கட்டாயமல்ல என்பதால், விவாகரத்துகள் எளிமையாக்கப்பட வேண்டிய ஒன்றாயிருக்கிறது..!!












Click it and Unblock the Notifications