நாளை பந்த்.. பெங்களூர் உட்பட கர்நாடகா முழுவதும் பஸ்கள் ஓடாது.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Recommended Video

பெங்களூர்: மகதாயி நதிநீர் விவகாரம் தொடர்பாக பெங்களூர் உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் நாளை பந்த் நடைபெற உள்ளது. இதனால் பஸ் சேவைகள் பாதிக்கப்படும், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளது.
கோவா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் நடுவே மகதாயி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மோதல் போக்கு நிலவுகிறது. கர்நாடகாவில் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், மத்தியில் ஆளும் பாஜகவிற்கு கடும் நெருக்கடி கொடுத்து காரியம் சாதிக்க கன்னட அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக கர்நாடகாவில் நாளை பந்த் நடத்த 2000க்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் இணைந்து அழைப்புவிடுத்துள்ளன.

அரசு ஆதரவு?
'கன்னட சலுவளி வாட்டாள்' என்ற கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னட அமைப்புகளை ஒருங்கிணைத்து பந்த்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த பந்த் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்ற அக்கறை, மாநிலத்தை ஆளும் காங்கிரசுக்கு இருக்கும் என்பதால், மறைமுகமாக, அரசும் பந்த்துக்கு ஆதரவு அளிக்கும் என்பது கன்னட அமைப்பினர் நம்பிக்கை.

பஸ்கள் ஓடாது
நாளைய பந்த்துக்கு கர்நாடக அரசு போக்குவரத்து கழகம், பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகம் ஆகியவை ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளன. ஆனால் இதுவரை வெளிப்படையாக அதை அறிவிக்கவில்லை. தமிழக பஸ்கள் காலை 6 மணிக்கு மேல் கர்நாடக எல்லைக்குள் வராது என கூறப்படுகிறது. மாலை 6 மணிக்கு பிறகே கர்நாடகாவிலிருந்து தமிழக பஸ்கள் கிளம்ப முடியும். அதேபோல தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்க தனியார் பள்ளி கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பதை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் நாளை முடிவு செய்வார்கள். கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

தனியார் வாகனங்கள்
லாரி, ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி உரிமையாளர்கள் சங்கங்கள் பந்த்துக்கு ஆதரவு அளிக்கவில்லை. எனவே அவர்களுடன் கன்னட அமைப்பினர் இன்று மதியம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது தங்கள் பந்த்துக்கு ஆதரவு அளிக்க கோரிக்கைவிடுப்பார்கள். அதன் அடிப்படையில், நாளைய ஸ்டிரைக்கிற்கு அந்த சங்கத்தினர் ஆதரவு அளிப்பார்களா, இல்லையா என்பது மாலையில் தெரிய வரும்.

பெங்களூர் பந்த்
இதனிடையே பிப்ரவரி 4ம் தேதி 'பெங்களூர் பந்த்'துக்கும் கன்னட அமைப்பினர் அழைப்புவிடுத்துள்ளனர். அன்று பெங்களூரில் மட்டும் ஸ்டிரைக் நடைபெறும். பாஜக நிகழ்ச்சிக்காக, பிரதமர் மோடி பிப்ரவரி 4ம் தேதி பெங்களூர் வர உள்ளதால், அன்றைய தினம் ஒரு பந்த் நடத்த கன்னட அமைப்பினர் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications