ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் இறந்திருக்க வாய்ப்பு: கர்நாடக மருத்துவ அதிகாரி
பாகல்கோட்டை: கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில், திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பாகல் கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா சூலிகேரி கிராமத்தை சேர்ந்தவர் ஹனுமந்தகட்டி. இவரது மகன் திம்மண்ணா (6). கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது தோட்டத்திலுள்ள சுமார் 300 அடி ஆழ போர்வெல் கிணற்றில் விழுந்துவிட்டான்.

இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முதல் இன்று வரை சிறுவனை மீட்க தொடர்ந்து பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக போர்வெல் அருகே பெரிய பள்ளம் பொக்லைன் உதவியால் தோண்டப்பட்டுவருகிறது. இதுவரை சுமார் 120 அடி ஆழத்துக்கு பொக்லைன் தோண்டியுள்ளது. 5வது நாளாக மீட்பு பணி நடைபெற்றுவரும் நிலையில், சிறுவன் உயிரிழந்திருக்க கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சிறுவனை மீட்க வந்த மதுரையை சேர்ந்த மணிகண்டன் தலைமையிலான ரோபோ மீட்பு குழுவினராலும் சிறுவனை மீட்க முடியவில்லை. சிறுவனுக்கு மேலே மணல் விழுந்து அடைத்துக் கொண்டிருப்பதால், ரோபோவின் கரங்கள் சிறுவனை கவ்வி பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் கிணற்றுக்குள் இருந்து துர்நாற்றம் வரத்தொடங்கியுள்ளது. எனவே சிறுவன் பலியாகியிருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. போதிய ஆக்சிஜன் கிடைக்காததால் மூச்சு திணறி சிறுவன் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக மாவட்ட மருத்துவ அதிகாரி பி.டி.கித்தூர் தெரிவித்தார். பொக்லைன் மூலம் தோண்டப்படும் பள்ளத்தில் சுரங்கம் அமைத்துதான் சிறுவனின் உடலை கைப்பற்ற முடியும் என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications