கேரளா: 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார் கைது
திருச்சூர்: கேரளாவில் 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூர் கத்தோலிக்க மறைமாவட்டத்துக்கு உட்பட்ட தளிக்கட்டுச்சேரியிலுள்ள புனித பவுல் தேவாலயத்தில் பாதிரியாக இருப்பவர் ராஜு கொக்கன் (40). இந்த தேவாலயத்துக்கு வழக்கமாக வரும் குடும்பத்தை சேர்ந்த 9 வயது சிறுமி மீது ராஜு கொக்கனுக்கு தவறான எண்ணம் ஏற்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேவாலயம் வந்த அச்சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்ற பாதிரியார், அச்சிறுமியின் ஆடைகளை அவிழ்த்து அதை செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
போலீஸ் வழக்குப் பதிவு
பாதிரியாரின் செய்கையால் அதிர்ச்சிடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளாள். இதையடுத்து பாதிரியார் மீது சிறுமியின் பெற்றோர் திருச்சூர் காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் பாதிரியார் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. செல்போனில் ஆபாசமாக படம் பிடித்ததுள்ளதால் அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழும் வழக்குப்பதிவு செய்தனர்.
பாதிரியார் மீது நடவடிக்கை
புகார் பற்றிய தகவலறிந்த பாதிரியார் தலைமறைவானார். திருச்சூர் மறைமாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஜியோகடவில் இதுகுறித்து கூறுகையில், "நாங்கள் உண்மையை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் தேவாலய சட்டப்படி பாதிரியார் ராஜு கொக்கன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பாதிரியார் கைது
இந்த நிலையில் தலைமறைவான ராஜூவை, நாகர்கோவில் அருகே உள்ள பூதப்பாடி பகுதியில் தமிழக காவல்துறை உதவியுடன் கேரள காவல்துறை அவரை ஞாயிறன்று கைது செய்தது.
மூன்று முறை பலாத்காரம்
இது குறித்து கேரள போலீசார் கூறுகையில் "பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து எங்களிடம், பாதிரியார் தன்னிடம் 3 முறை அலுவலகத்தில் வைத்து தவறாக நடந்து கொண்டதாகவும் மேலும் தன்னை வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி தனது போனில் படம் பிடித்து வைத்து மிரட்டியதாகவும் கூறியதாக தெரிவித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications