For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளா வெள்ளம்: ஐக்கிய அரபு அமீரக நிதி உதவியை மத்திய அரசு அனுமதிக்காது.. திடுக் காரணம்!

கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் கொடுக்க இருக்கும் 700 கோடி ரூபாயை மத்திய அரசு இந்தியாவிற்குள் அனுமதிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஐக்கிய அரபு அமீரக நிதி உதவியை மத்திய அரசு அனுமதிக்காது...திடுக் காரணம்- வீடியோ

    திருவனந்தபுரம்: கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் கொடுக்க இருக்கும் 700 கோடி ரூபாயை மத்திய அரசு இந்தியாவிற்குள் அனுமதிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

    கேரளாவில் வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது. ஆனால் இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. இதற்காக பல மாநில அரசுகள் நிதி உதவி அளித்துள்ளது.

    ஆனாலும் கேரளாவில் மொத்தமாக இயல்புநிலை திரும்ப குறைந்தது 2500 கோடி ரூபாயாவது தேவைப்படும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு இதுவரை 600 கோடி ரூபாய் கொடுத்துள்ளது.

    ஐக்கிய அரபு அமீரகம் உதவி

    ஐக்கிய அரபு அமீரகம் உதவி

    கேரளாவில் வெள்ளம் என்றவுடன், அரபு நாடுகள்தான் மிகவும் அதிகஅளவு உதவிகளை செய்தது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 700 கோடி கொடுப்பதாக அறிவித்தது. உலகிலேயே கேரளா வெள்ளத்திற்கு அதிக நிதி உதவி அளிக்க முன்வந்திருக்கும் நாடு ஐக்கிய அரபு அமீரகம்தான்.

    ஏற்க வாய்ப்பில்லை

    ஏற்க வாய்ப்பில்லை

    ஆனால் கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் கொடுக்க இருக்கும் 700 கோடி ரூபாயை மத்திய அரசு இந்தியாவிற்குள் அனுமதிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. நிதி உதவியை ஏற்க மாட்டோம் என்று இன்று இந்திய அரசு, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பதில் அளிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் வேறு வெளிநாடுகள் கொடுக்கும் பணத்தையும் ஏற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இதற்கு ஒரு காரணம் உள்ளது, கடந்த 2004ல் இந்திய அரசு சுனாமியை தொடர்ந்து சட்டம் ஒன்று கொண்டு வந்தது. அதன்படி இனி வெளிநாட்டு நிதி உதவியை பேரிடர் காலத்தில் ஏற்க மாட்டோம், சில நாடு கொடுக்கும் நிதியை ஏற்க முடியும், சில நாடு கொடுக்கும் நிதியை ஏற்க முடியாது, இதனால் உறவில் குழப்பம் ஏற்படும். இதனால் மொத்தமாக வெளிநாட்டு நிதியை ஏற்க கூடாது என்று சட்டம் கொண்டு வந்துள்ளனர்.

    கொந்தளிப்பு

    கொந்தளிப்பு

    இதை காரணம் காட்டி தற்போது கேரளாவிற்கு வழங்கப்பட உள்ள உதவி மறுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் இதற்கு முன் சென்னை வெள்ளம், உத்தர காண்ட் வெள்ளம், குஜராத் மும்பை வெள்ளம் ஆகிய பேரிடர்களின் போதும் வெளிநாட்டு நிதி ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

    English summary
    The United Arab Emirates had offered financial assistance of Rs 700 crore for flood relief operations in Kerala, but the government is unlikely to accept it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X