For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முல்லை பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கேரள வனத்துறை

Google Oneindia Tamil News

தேக்கடி: முல்லைப்பெரியாறு அணையினைப் பார்வையிடச் சென்ற தமிழக அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் தொடர்ந்து கேரளத் தரப்பு முரட்டுத்தனம் காட்டி வருகிறது. தமிழக அரசின் பொறுப்பில் உள்ள அணைக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் செல்லும்போதெல்லாம் அவர்களைத் தடுப்பதும், மோதலில் ஈடுபடுவதுமாக உள்ளது கேரள வனத்துறை.

Kerala forest department refused Tamil Nadu officials….

இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை குறித்த ஆய்வின் வழக்கமான பணிகளுக்காக இன்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது அவர்களை தடுத்தி நிறுத்திய கேரள வனத்துறையினர், தங்களது அனுமதியின்றி அங்கு யாரும் இனி நுழையக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், இனி உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே தமிழக அதிகாரிகள் அணையின் பணிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினர். இச்சம்பவம் தமிழக அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Tamil Nadu officials stopped by Kerala forest rangers for visiting Mullai periyaru dam today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X