அரை ஆடைக்கு மாறிய காந்தி எங்கே, டெய்லி 5 டிரஸ் போடும் மோடி எங்கே.. குஷ்பு பிரசாரம்
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழர் பகுதிகளில் நடிகை குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.
டெல்லி சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு தமிழர் பகுதிகளில் ஆதரவு திரட்டுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், நடிகை குஷ்புவும் டெல்லி சென்றுள்ளனர்.
வாஜிபூர், ஜே.ஜே.காலனி ஆகிய இடங்களில் இளங்கோவன் காங்கிரஸ் தொண்டர்களுடன் சென்று ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஏழைகளுக்காக காந்தி வாழ்ந்தார். ஏழைகளின் நிலை அறிந்து தானும் அரை ஆடைக்கு மாறினார். ஆனால் வளர்ச்சி என்று பேசி வரும் மோடி தினமும் 5 ஆடம்பர ஆடைகளை அணிகிறார். இதுதான் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் உள்ள வித்தியாசம் என்றார்.
இதேபோல், தமிழர்கள் அதிகம் வாழும் ஆர்.கே.புரம், நொய்டா பகுதிகளில் நடிகை குஷ்பு தமிழர்கள் பகுதிகளில் வீதி வீதியாக சென்று ‘கை' சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.
அப்போது மக்கள் மத்தியில் குஷ்பு பேசுகையில், ‘எல்லோரும் ஒற்றுமையுடன் வாழ நாட்டில் அமைதி நிலவ கை சின்னத்துக்கு வாக்காளியுங்கள்' என்றார்.
தொடர்ந்து இன்றும், நாளையும் டெல்லியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இளங்கோவனும், குஷ்புவும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications