ஸ்டெப் பை ஸ்டெப்பா தான் முடியும்.. இது மாய மந்திரக்கோல் கிடையாது.. நீதிபதியால் நிசப்தம்.. என்னாச்சு
கொல்கத்தா: 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தினால், மேற்கு வங்கத்தில் பரபரப்பு இன்னமும் நீடிக்கிறது. மாநில காவல்துறைக்குள்ளும் பதற்றத்தை தந்திருக்கும் இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தா நீதிமன்றம் முக்கிய கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ளது அந்த கிராமம்.. அங்கு வசித்து வந்த 9 வயது, 2 நாட்களுக்கு முன்பு டியூஷனுக்கு சென்றவர் அதற்கு பிறகு வீடு திரும்பவில்லை..

இதனால் பதறிப்போன பெற்றோர் எங்கெங்கோ தேடிப்பார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை. இதனால் போலீசில் புகார் கொடுக்க சென்றால், அங்கிருந்த போலீசார் பெற்றோரின் புகாரை ஏற்க மறுத்து, வேறு ஒரு போலீஸ் ஸ்டேஷனில் புகார் தர சொல்லியிருக்கிறார்கள்.
இதற்கு நடுவில், அந்த பகுதியிலிருந்த ஒரு குளத்தில், சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடம்பெல்லாம் காயங்கள் கிடந்தன.. சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறி கொதிப்படைந்த பெற்றோரும், உறவினர்களும், கைகளில் துடைப்பம், கட்டைகள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு, அங்கிருந்த போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
வாகனங்கள்: மஹிஸ்மாரி பகுதி புறக்காவல் நிலையத்துக்குள் நுழைந்து போலீசாரை தாக்கினர்.. போலீஸ் வாகனங்களையும் கிராம மக்கள் தீயிட்டு எரித்தனர்.. இதைப்பார்த்து பதறிய போலீசார் அங்கிருந்து தப்பியோடினர்... கிராம எல்லைகளில் உள்ள நெடுஞ்சாலையில் தடுப்புகளை போட்டு கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளும் இதற்கான கண்டனங்களை பதிவு செய்து, ஆளும் கட்சியை விமர்சிக்க துவங்கின. இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது..
இறுதியில், சிறுமியை கொலை செய்த 19 வயது நபரை போலீசார் கைது செய்தனர். எனினும், இந்த விவகாரம் போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக உருவானது. இந்த விவகாரம் தொடர்பாக கோல்கட்டா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அவசர வழக்கு: இதனை அவசர வழக்காக நீதிபதி திரிதங்கர் கோஷ் விசாரித்தார்.. அப்போது அவர் சொல்லும்போது, "தாங்கள் குற்றவாளி என கருதுபவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.. இது இங்கு மட்டுமில்லை.. சுப்ரீம் கோர்ட் என்றாலும்சரி, மாநில ஐகோர்ட்கள் என்றாலும் சரி, இதுதான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
உடனடியாக நீதி வழங்குவதற்கான மாய மந்திரக்கோல் எதுவும் நீதிமன்றங்களிடம் இல்லை... நீதி என்பது "ஸ்டெப் பை ஸ்டெப்" முறையிலான நடைமுறையாகும்... தங்கள் முன்னர் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் தான் நீதிமன்றங்கள் செயல்படும்" என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள்: சிறுமியை பறி கொடுத்த பெற்றோர்கள் கொந்தளித்து போராடி வரும்நிலையில், மாநில ஆட்சிக்கு எதிரான கண்டனங்களை எதிர்க்கட்சிகள் தெரிவித்து வரும்நிலையில், ''உடனடி நீதி வழங்குவதற்கான மாய மந்திரக்கோல் ஏதும் நீதிமன்றத்திடம் இல்லை'' என கொல்கத்தா ஐகோர்ட் தெரிவித்துள்ளது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
இந்நிலையில், சிறுமியின் உடல் ஜவஹர்லால் நேரு நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கல்யாணியில் உள்ள ஜேஎன்எம் மருத்துவமனையில் உடல் கூறாய்வு செய்ய, கொல்கத்தா ஹைகோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து சிறுமியின் உடல் இன்று காலை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. நீதிபதியின் முன்னிலையில் சிறுமியின் உடல் கூறாய்வு நடைபெற வேண்டும் என்று நேற்றைய தினம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே, இன்று போஸ்ட்மார்ட்டம் நடைபெற உள்ளது. இது மேலும் பதற்றத்தை மேற்கு வங்கத்தில் ஏற்படுத்தி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications