அமெரிக்காவில் பொறியாளர் பணியை உதறிவிட்டு... இந்திய ராணுவத்தில் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகன்
அமெரிக்காவில் கிடைத்த வேலையை உதறி தள்ளிவிட்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து அதிகாரி ஆனார் தெலுங்கானா இளைஞர் பர்னானா யாதகிரி.
ஹைதராபாத்: ஐஐஐடியில் படித்து அமெரிக்காவில் கிடைத்த வேலையையும் உதறிவிட்டு நாட்டுக்கு சேவை செய்வதற்காக இந்திய ராணுவத்தில் சேர்ந்துள்ளார் கூலித் தொழிலாளியின் மகன் பர்னானா யாதகிரி.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்தவர் பர்னானா குணைய்யா. சிமென்ட் தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு ரூ. 100 மட்டுமே கூலியாக பெற்று வந்தார்.
இவரது மகன் பர்னானா யாதகிரி. வறுமையிலும் கஷ்டப்பட்டு படித்த யாதகிரி ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்து படித்து மென்பொருள் பொறியாளராகினார்.

அமெரிக்க வேலையை உதறினார்
பின்னர் கல்லூரியில் நடந்த வளாக நேர்காணலில் தேர்ச்சி பெற்று அமெரிக்காவில் வேலை கிடைத்தது. எனினும் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அமெரிக்க வேலையை உதறித் தள்ளினார்.

வெள்ளிப் பதக்கம்
பின்னர் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். டேராடூனில் உள்ள ராணுவ பயிற்சி கழகத்தில் பயிற்சியை நிறைவு செய்த இவர், வெள்ளிப் பதக்கமும் வென்றார். இதைக் கண்டு அவரது தந்தை பர்னானா குணைய்யா ஆனந்த கண்ணீர் விட்டார்.

தந்தை கூலித் தொழிலாளி
இதுகுறித்து யாதகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில் எனது தந்தை கூலித் தொழிலாளி. போலியோவால் பாதிக்கப்பட்ட எனது தாய் அலுவலகங்களில் மேசைகளை சுத்தம் செய்யும் வேலையில் இருந்தார். இருவரும் சேர்ந்து என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தனர்.

நாட்டுக்கு சேவை செய்வேன்
எனது தந்தை மிகவும் எளிமையானவர். நான் ராணுவத்தில் சிப்பாயாக பணி சேர்ந்துள்ளதாக எனது தந்தை கருதினார். அதிக வருமானம் கிடைக்கும் பணியை உதறி நான் தவறு செய்துவிட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் நான் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளேன். எனது மனசாட்சிபடி நாட்டுக்கு சேவை செய்வேன் என்றார் யாதகிரி.

யாதகிரிக்கு குவியும் பாராட்டுகள்
ஏசியில் உட்கார்ந்து கொண்டு பாதுகாப்பான சூழலில் வேலையும், கை நிறைய ஊதியமும் கிடைத்த போதிலும் அதை உதறிவிட்டு நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ராணுவத்தில் சேர்ந்துள்ள யாதகிரிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
IT jobs: ரூ.75,000 போனசுடன் ஐடி வேலை.. BCA - B.sc படித்தோருக்கு WIPRO தரும் ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications