மகனுக்கு பாட்னாவில் திருமணம்.. லாலு பிரசாத்திற்கு 5 நாள் பரோல்!
மாட்டு தீவன வழக்கில் சிறைத்தண்டனை பெற்று இருக்கும் லாலு பிரசாத் யாதவிற்கு அவரது மகன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பரோல் வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்று இருக்கும் லாலு பிரசாத் யாதவிற்கு அவரது மகன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பரோல் வழங்கப்பட்டுள்ளது.
மாட்டு தீவன வழக்கில் சிறைத்தண்டனை பெற்று இருக்கும் லாலு பிரசாத், ராஞ்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு ரத்த கொதிப்பு, சக்கரை வியாதி உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருக்கிறது என்று ராஞ்சி ராஜேந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

பின் அங்கு இருந்து மாற்றப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மீண்டும் லாலு பிரசாத் யாதவ், ராஞ்சி மருத்துவமனையிலேயே சிகிச்சையை பெற்று வருகிறார். அவருக்கு ரத்த கொதிப்பு உள்ளிட்ட நிறைய பிரச்சனைகள் இருக்கிறது.
இந்த நிலையில்தான் தற்போது லாலு பிரசாத் யாதவிற்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு மொத்தம் ஐந்து நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. அவரது மகன் தேஜ் பிரதாப் யாதவிற்கு இந்த வாரம் திருமணம் நடக்க இருக்கிறது. இதற்காக அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
வரும் மே 12ம் தேதி பாட்னாவில் இந்த திருமணம் நடக்க உள்ளது. எம்எல்ஏவாக இருக்கும் பிரதாப் யாதவ் கடந்த வாரம் இந்த பரோலுக்காக விண்ணப்பம் செய்து இருந்தார். இந்த நிலையில் நாளையில் இருந்து ஏப்ரல் 14ம் தேதி வரை லாலு பிரசாத்துக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications