நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிர்ப்பு: சோனியா உட்பட 13 கட்சித் தலைவர்கள் டெல்லியில் பேரணி!
டெல்லி: மத்திய பாரதிய ஜனதா அரசின் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட 13 கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி இன்று மாலை பேரணி நடத்தினர்.
2013-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிலங்களை கையகப்படுத்த 80% விவசாயிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும் மேலும் 5 ஆண்டுகள் நிலத்தை பயன்படுத்தாவிட்டால் விவசாயிகளிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்ற திருத்தங்களை கொண்டுவந்தது.
Delhi: Congress President Sonia Gandhi takes part in opposition parties' protest march against land ordinance pic.twitter.com/9pbd5iLpup
— ANI (@ANI_news) March 17, 2015 ஆனால் தற்போதைய பா.ஜ.க. அரசு இந்த திருத்தங்களையும் நீக்கி அவரச் சட்டம் கொண்டுவந்துள்ளது. இதன்படி விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலத்தைக் கையகப்படுத்தலாம்;5 ஆண்டுக்கு பின்னரும் அரசு வசமே நிலம் இருக்கும் என்பது உள்ளிட்ட திருத்தங்களை அவசர சட்டத்தில் இடம்பெறச் செய்துள்ளது மத்திய அரசு.
இதற்கு மாற்றாக தாக்கல் செய்யப்பட்ட நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு லோக்சபா ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் மசோதாவை தற்போதைய வடிவில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
டெல்லியிலும் வடமாநிலங்களிலும் நேற்று இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமை ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எங்கே இருக்கிறார் எனத் தெரியாத நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர்களே இந்தப் போராட்டத்தை நடத்தினர்.
இப்போராட்டத்தின் போது நாடாளுமன்றத்தை இளைஞர் காங்கிரசார் முற்றுகையிட செல்ல முயன்றதால் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். தடையை மீறிய இளைஞர் காங்கிரசாரை போலீசார் தடியடி நடத்தியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விரட்டி அடித்தனர்.
Delhi: Opposition parties' protest march from Parliament to President's House against land ordinance pic.twitter.com/F5uGjAnOMz
— ANI (@ANI_news) March 17, 2015 இதனால் டெல்லி ஜந்தர் மந்தர் போர்க்களமாக காட்சி அளித்தது. இந்நிலையில் இந்த நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தி.மு,க. சமாஜ்வாடி உள்ளிட்ட 13 கட்சிகள் டெல்லியில் இன்று மாலை ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி நடத்தினர்.
இப்பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அம்பிகாசோனி, சசி தரூர், மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா, ஐக்கிய ஜனதா தளத்தின் சரத் யாதவ், திரிணாமுல் காங்கிரஸின் தினேஷ் திரிவேதி, தி.மு.க.வின் திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரணியின் முடிவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிராக மனு கையளிக்கப்பட்டது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications