ரயிலின் முன் குதித்து குடும்பத்துடன் தற்கொலை செய்த விரிவுரையாளர்- 3 வயது குழந்தை தப்பியது!
டெல்லி: டெல்லியில் கிட்டதட்ட 11 பக்கங்களுக்கு ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு குடும்பமே ரயிலின் முன்னர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கல்ப் ஆனந்த் என்பவர் தன்னுடைய மனைவி, மற்றும் 3 வயதான குழந்தையுடன் டெல்லியிலிருந்து மதுரா நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் முன்பாக குதித்து உயிரை விட்டுள்ளனர்.
சங்கல்ப்பும், மனைவியும் இறந்துவிட்ட நிலையில் 3 வயதான குழந்தை ரித்திமா மட்டும் அதிர்ஷ்டவசமாக பல்வேறு படுகாயங்களில் இருந்து தப்பி தன்னுடைய தாத்தா, பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சங்கல்பின் தந்தை சந்தோஷ் ஒரு பிரபலமான பாடலாசிரியர். "எங்களுடைய பேத்திக்காக நாங்கள் வாழவேண்டும்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கிட்டதட்ட 11 பக்க தற்கொலை கடிதத்தினை எழுதியுள்ள அவர், அதில் தான் நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆப் பாரன்சிக் சயின்ஸ்சில் வேலை செய்த பொழுது பெரும் ஊழலில் மாட்டிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். அதனால், தலைமை அதிகாரிகளின் தொல்லை தாங்க முடியாமல், மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், சில அதிகாரிகளின் நடுவில் பெரும் பதட்டத்தையும் கிளப்பியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications