வதேரா நில பேரத்துக்கு ஒப்புதல் - ஹரியானா அரசை தேர்தல் ஆணையம் விசாரிக்க மோடி வற்புறுத்தல்

Subscribe to Oneindia Tamil

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளபோது சோனியா மருமகனின் நில பேரத்துக்கு ஹரியானா மாநில அரசு ஒப்புதல் அளித்தது பற்றி தேர்தல் கமிஷன் விசாரிக்க வேண்டும் என பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி அங்கு தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடந்து வருகிறது. பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடியும், காங்கிரஸுக்கு ஆதரவாக சோனியாவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சார் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, சோனியா காந்தியின் மருமகனின் நில பேரத்துக்கு ஹரியானா மாநில அரசு ஒப்புதல் அளித்த விவகாரம் குறித்துப் பேசினார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்...

ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள நிலம் தொடர்பாக, (சோனியா காந்தி மருமகன்) ராபர்ட் வதேராவுக்கும், டி.எல்.எப். கம்பெனிக்கும் இடையிலான நில பேரத்துக்கு ஹரியானா மாநில காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, இந்த ஒப்புதலை மாநில அரசு துணிச்சலாக அளித்துள்ளது.

அவசர கதியில் ஒப்புதல்...

தேர்தல் முடிந்த பிறகு, இந்த சட்டவிரோத பேரத்துக்கு ஒப்புதல் கிடைக்காது என்று மாநில அரசுக்கு தெரியும். அதனால் தான், அவசரகதியில் ஒப்புதல் அளித்துள்ளது. மேலிடத்தில் இருந்து மாநில அரசுக்கு நிர்ப்பந்தம் வந்திருக்கலாம் என்று கருதுகிறேன். இதன்மூலம், இந்த தேர்தலில் தங்களுக்கு தோல்வி உறுதி என்பதை காங்கிரசும், மாநில அரசும் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர்.

விசாரணை தேவை...

இந்த நில பேர ஒப்புதலை தேர்தல் கமிஷன் மிக முக்கியமாக கவனத்தில்கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, இதுபோன்று ஒப்புதல் அளிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்று ஆய்வு செய்ய வேண்டும். இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும்.

குடும்ப அரசியலும், குண்டர் அரசியலும்...

காங்கிரசின் குடும்ப அரசியலில் இருந்தும், சவுதாலாவின் குண்டர் அரசியலில் இருந்தும் இம்மாநிலத்தை மக்கள் விடுவிக்க வேண்டும். ஹரியானாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களது குடும்பம்தான் ஆட்சி நடத்துகிறது. அவர்கள் குடும்பம் மட்டுமே நன்றாக வாழ்கிறது. இத்தகைய குடும்ப அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்.

சிறையில் சவுதாலா...

முன்னாள் முதல்வர் சவுதாலா, ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். அவர், சிறையில் இருந்தபடியே பதவி ஏற்றுக் கொண்டு ஆட்சி நடத்தப்போவதாக கூறியுள்ளார். அவருக்கு வயதாகி விட்டது. ஆனாலும், தனது மகன்களிடம் கூட ஆட்சியை ஒப்படைக்க அவருக்கு விருப்பம் இல்லை. மகன்களை கூட நம்பாதவர் மீது மக்கள் எப்படி நம்பிக்கை வைக்க முடியும்? இத்தகைய பலசாலிகளிடம் இருந்து ஹரியானாவை விடுவிக்க வேண்டும்.

தலை விரித்தாடும் குற்றங்கள்...

ஹரியானா மாநில முதல்வர் புபிந்தர்சிங் ஹூடா, தனது குடும்பத்துக்காகவே ஆட்சி நடத்துகிறார். தலித்துகளுக்கு எதிராக நடக்கும் அராஜகங்களை மாநில அரசு தடுக்க தவறி விட்டது. தலித் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். ஒரு பெண் தலைமையிலான கட்சி நடத்தும் அரசில், ஏராளமான கற்பழிப்புகள் நடக்கின்றன. பெண்களும், சிறுமிகளும் பாதுகாப்பாக உணர்கிற அரசு வேண்டும். அதற்காகவே நான் பாடுபடுகிறேன்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+