கட்சியில் உள்ள அனைவருக்கும் தேர்தல் வெற்றியில் பங்கிருக்கிறது... மோடியை ஓரங்கட்டும் அத்வானி
டெல்லி: நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி 3 மாநிலங்களில் வெற்றியையும், டெல்லியில் அதிகப் படியான தொகுதிகளில் வெற்றியும் பெற்றதற்கு முக்கியக் காரணம் அம்மாநில முதல்வர்களே எனப் பாராட்டியுள்ளார் அக்கட்சியின் மூத்தத் தலைவர் அத்வானி.
பாரதீய ஜனதா தனது தேர்தல் வெற்றிக்குக் முக்கியக் காரணம் என அக்கட்சியின் பிரதம வேட்பாளரும், தற்போதைய முதல்வருமான நரேந்திர மோடியே என அனைவரும் புகழ்ந்து கொண்டிருக்க, அத்வானி மட்டும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதைக் காட்டுகிறது அவரது சமீபத்திய பேட்டி.
மேலும், தேர்தல் வெற்றிக் குறித்து பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஓருவரான எல்.கே.அத்வானி செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ‘இந்தத் தேர்தல் வெற்றியில் கட்சியில் உள்ள அனைவருக்கும் பங்கிருக்கிறது, முக்கியமாக முதல்வர்களுக்கு' எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், வெற்றிக்கு முக்கியக் காரணம் மோடி தான் எனக் கூறியிருந்தார்.
ஆனால், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டதிலிருந்து தொடர்ந்து அமைதி காத்து வந்த அத்வானி, தற்போது சிவ்ராஜ் சிங் சௌகான் மற்றும் ராமன் சிங் பொன்றோர் தேர்தலுக்காக அதிகமாக உழைத்திருப்பதாகப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications