91 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு.. களத்தில் பல லட்சம் வீரர்கள்.. தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

லோக்சபா தேர்தலை முன்னிட்டு நாடு முழுக்க பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Lok Sabha Election : முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. 91 தொகுதிகளில் பலப்பரீட்சை

    டெல்லி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு நாடு முழுக்க பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இன்று லோக்சபா தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. இன்று நாடு முழுக்க மொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று லோக்சபா தேர்தல் நடக்கிறது. 18 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசத்திலும் தேர்தல் நடக்கிறது.

    அதேபோல் இந்த லோக்சபா தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, சிக்கிம், அருணாசலப்பிரதேசம், ஒடிசா (சில தொகுதிகள்) ஆகிய சட்டசபைக்கும் இன்றுதான் தேர்தல் நடைபெறுகிறது.

    சிறப்பு அதிகாரி

    சிறப்பு அதிகாரி

    இந்த நிலையில் இந்த தேர்தலுக்காக தற்போது சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது பாதுகாப்பு பணிகள் டிஜிபி அசுதோஷ் சுக்லா தலைமையில் நடைபெறும் தேர்தல் ஆணையம் தெரிவித்து இருக்கிறது. இதற்கான பணி ஆணையை நேற்றுதான் தேர்தல் ஆணையம் வழங்கியது.

    சிறப்பு

    சிறப்பு

    இந்த தேர்தலுக்காக துணை ராணுவ படையினர், சிஆர்பிஎப், மத்திய ரிசர்வ் போலீஸ், மாநில போலீஸ் களமிறக்கப்பட்டுள்ளனர். அதிக அச்சம் நிலவும் பகுதிகளில்தான் சிஆர்பிஎப் படையினர் களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    அதன்படி அசம்பாவிதங்களை தவிர்க்க 80 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் சில வாக்குச்சாவடிகளில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரிலும் தேர்தல் நடப்பதால் அங்கு முழுக்க முழுக்க ராணுவம் களமிறக்கப்பட்டு இருக்கிறது.

    நக்சல் தாக்குதல்

    நக்சல் தாக்குதல்

    அதேபோல் கடந்த சில நாட்களாக நக்சல் தாக்குதல் நடந்து வருவதால், சிக்கிம், அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிக அதிக அளவில் துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதுவரை தேர்தலில் எந்த விதமான அசம்பாவிதமும் நடக்காத விதத்தில், பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

    வெடிகுண்டு பாதுகாப்பு

    வெடிகுண்டு பாதுகாப்பு

    அதேபோல் நக்சல்கள் இருக்கும் பகுதிகளில் தற்போது வெடிகுண்டு நிபுணர்களும் பாதுகாப்பிற்காக அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். எல்லா வாக்குசாவடிகளும் தற்போது சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது.
    மலைப்பிரதேசங்களில் அதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+