மத்திய பிரதேசத்தில் இந்தியாவை துவம்சம் செய்த பாஜக? ஒட்டுமொத்தமாய் அள்ளிட்டாங்க..இந்தியா டுடே கணிப்பு
போபால்: லோக் சபா தேர்தல் 2024 முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளின் படி மத்திய பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளில் அனைத்து தொகுதிகளிலும் பாஜகவே வெல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இதயம் என அழைக்கப்படும் மத்திய பிரதேச மாநிலத்தில் 29 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அந்த மாநிலத்தில் பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட ஐந்து தேசிய கட்சிகளும், சமாஜ்வாதி ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட ஆறு மாநில கட்சிகளும் 95 சிறிய கட்சிகளும் இருக்கின்றன. ஆனாலும் பல ஆண்டுகளாக போட்டி பாஜகவுக்கும் காங்கிரஸ்க்கும் மட்டுமே இருக்கிறது.

கடந்த காலத்தில் பாஜகவும் காங்கிரசும் தனித்தே போட்டியிட்ட நிலையில் இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 28 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. கஜுராஹோ தொகுதியில் மட்டும் சமாஜ்வாதி போட்டியிடுகிறது. அதே நேரத்தில் பாஜக இந்த தேர்தலிலும் தனித்தே களம் கண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக மொத்தமுள்ள 29 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சி 28 லிருந்து 29 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், இந்தியா கூட்டணி பூஜ்ஜியத்தில் இருந்து ஒரு தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டிருக்கிறது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் 28 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 3 கோடியே 65 லட்சம் வாக்குகள் பதிவான நிலையில் 58 சதவீத வாக்குகளை பாஜக அள்ளியது. அதே நேரத்தில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெல்ல முடிந்தது. 2014 மக்களவைத் தேர்தலிலும் பாஜக 27 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இந்த நிலையில் இந்த தேர்தலிலும் மத்திய பிரதேசத்தில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறும் என இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications