கமல்நாத்தையே கலங்க வைத்த விவேக்.. நீண்ட இழுபறிக்கு பின் பெருமூச்சு.. தற்போதைய நிலவரம் என்ன?
போபால்: மத்திய பிரதேச தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் கமல்நாத், ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்தித்தார். எனினும், தற்போது முன்னிலை பெற்று வருகிறார்.
பாஜக வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்று மத்தியப் பிரதேசம். கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 114 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் 109 இடங்களில் பாஜகவும் வெற்றிபெற்றது.

ஆனால், முதலமைச்சர் பதவியை பெறுவதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத், இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கிடையே தொடர் போட்டி நிலவி வந்தது. கமல் நாத்துக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் சிந்தியா அதிருப்தியில் இருந்து வந்தார்.
இறுதியில், சொந்த கட்சிக்கு எதிராக போர்க்கோடி தூக்கிய சிந்தியா, தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார். இதனால், ஆட்சி அமைத்த 16 மாதங்களில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று, ஆட்சி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ம.பி மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் படேல், ஃபகன் சிங் குலாஸ்தே உட்பட பாஜக, காங்கிரஸ், ஆத் ஆத்மி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுயேட்சைகள் என 2,533 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மொத்தம் 230 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய தேவை உள்ளது. ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையேதான் இம்மாநிலத்தில் பிரதான போட்டி நிலவுகிறது. இந்த இரு கட்சிகளுக்கிடையே இழுபறி நீடிப்பதாக கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவடைந்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலையில் (காலை 11 மணி) பாஜக 156 இடங்களிலும், காங்கிரஸ் 71 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மற்றவர்கள் 3 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.
முன்னாள் முதலமைச்சரும், ம.பி காங்கிரஸ் தலைவருமான கமல்நாத், தொடக்கத்தில் பின்னடைவைச் சந்தித்தார். சிந்த்வாரா தொகுதியில் போட்டியிட்ட கமல்நாத், பாஜக வேட்பாளர் விவேக் பண்டி சாஹுவை விட குறைவான வாக்குகளைப் பெற்றார். எனினும், மின்னணு வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கிய பிறகு முன்னிலை பெற்றார் கமல்நாத். கமல்நாத்துக்கு பயங்கர டஃப் கொடுத்து வருகிறார் பாஜக வேட்பாளர்.
காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து வந்தாலும், தேர்தல் முடிவுகள் குறித்து மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் நம்பிக்கையுடன் இருக்கிறார். மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத், "நான் தற்போதைய நிலவரத்தை பார்க்கவில்லை, மத்தியப் பிரதேச வாக்காளர்கள் தங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவே விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன். இப்போதே இடங்களின் எண்ணிக்கையை எண்ண வேண்டாம். நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
கமல்நாத் 1998 முதல் சிந்த்வாரா மக்களவைத் தொகுதியில் இருந்து பலமுறை வெற்றி பெற்றுள்ளார். கடந்த முறை சிந்த்வாரா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்று முதல்வர் ஆனார். 2018ல் சிந்த்வாரா தொகுதியில் கமல்நாத் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் விவேக் பண்டி சாஹுவை வென்றிருந்தார். ஆனால் இந்த முறை அவர் சிந்த்வாரா சட்டமன்றத் தொகுதியில் பின்னடைவைச் சந்தித்து வந்தார்.
இந்நிலையில், தற்போதைய சூழலில் அவர் சுமார் 8000 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கடும் போட்டி நிலவி வரும் நிலையில், கமல்நாத் கரையேறுவாரா.. பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications