ஜம்மு காஷ்மீரில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல்! களம் காணும் முக்கிய வேட்பாளர்கள்! முழு விவரம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 26 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஓமர் அப்துல்லா உட்பட பல முக்கிய வேட்பாளர்கள் களம்காண்கின்றனர்.
10 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் தேர்தல் என்பதாலும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட பின்னர் நடக்கும் வாக்குப்பதிவு என்பதால், இந்த சட்டப்பேரவை தேர்தல் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தும், மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக ஆகிய தனித்தனியாகவும் போட்டியிடுகின்றன.

இன்று ஜம்மு பிராந்தியத்தில் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் உள்ள 11 தொகுதிகளுக்கும், காஷ்மீர் பிராந்தியத்தில் புட்காம், ஸ்ரீநகர் மற்றும் கந்தர்பால் மாவட்டங்களில் உள்ள 15 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஓமர் அப்துல்லா, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ரவீந்தர் ரெய்னா மற்றும் அப்னி கட்சியின் தலைவர் அல்தாப் புகாரி என பல முக்கிய தலைகள் களமிறங்குகின்றன.
ஓமர் அப்துல்லா: தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரான ஓமர் அப்துல்லா இந்த முறை மத்திய காஷ்மீரில் உள்ள புத்காம் மற்றும் கந்தர்பால் உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தேசிய மாநாட்டின் கோட்டையாக கந்தர்பால் தொகுதி இருந்து வருகிறது. இக்கட்சியின் முன்னாள் தலைவர்கள் இந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள். முதன் முதலாக இக்கட்சியின் நிறுவனர் ஷேக் முகமது அப்துல்லா 1977 இல் இந்த இடத்தை வென்றார்.
தொடர்ந்து அவரது மகன் ஃபரூக் அப்துல்லா 1983, 1987 மற்றும் 1996 என மூன்று முறை இந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2008ல் ஃபரூக் அப்துல்லாவின் மகன் ஓமர் அப்துல்லா இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். புத்காம் தொகுதியில் பிடிபியின் ஆகா சையத் முன்தாசிர் மெஹ்தி, அவாமி தேசிய மாநாட்டின் அகமது மூஸ்வி என 7 வேட்பாளர்களை எதிர்த்து ஓமர் அப்துல்லா போட்டியிருகிறார்.
ரவீந்தர் ரெய்னா: பாரதிய ஜனதா கட்சியின் ஜம்மு காஷ்மீர் மாநில தலைவராக இருப்பவர்தான் ரவீந்தர் ரெய்னா. இவர் கடந்த 2014ம் ஆண்டு நவ்ஷேரா சட்டப்பேரவை தொகுதியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். இந்த முறையும் இதே தொகுதியில் களமிறங்கியுள்ளார். இந்த தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
ஆனால், தேசிய மாநாட்டு கட்சியின் எம்எல்சியான சுரிந்தர் சவுத்ரி இவருக்கு டஃப் கொடுப்பார் என்று சொல்லப்படுகிறது. சவுத்ரிக்கு காங்கிரஸ் ஆதரவும் இருக்கிறது.
அல்தாப் புகாரி: ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சியின் தலைவர் அல்தாப் புகாரி ஜம்மு காஷ்மீரின் மிகப்பெரும் பணக்காரர். இவருக்கு ரூ.165 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீநகரில் உள்ள சன்னபோரா தொகுதியில் போட்டியிடும் புகாரியை எதிர்த்து, பிடிபியின் முகமது இக்பால் ட்ரம்பூ, தேசிய மாநாட்டின் முஷ்டாக் குரு மற்றும் பாஜகவின் ஹிலால் அகமது வானி ஆகியோர் களம் இறங்குகின்றனர். இந்த தொகுதிக்கும் இன்றுதான் தேர்தல் நடக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications