ஸ்ரீநகர் ஓட்டலில் பெண்ணுடன் மேஜர் நெருக்கம்... சீனியாரிட்டி பறிப்பு.. காஷ்மீரை விட்டு இடமாற்றம்
Recommended Video
ஸ்ரீநகர்: காஷ்மீர் ஓட்டலில் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததாக புகாரில் சிக்கிய மேஜர் லீத்துல் கோகாய்க்கு ராணுவ நீதிமன்றம் தண்டனை கொடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஓட்டலில் மேஜர் லத்துல் கோகாய். இவர் கடந்த ஆண்டு பணி நேரத்தில் காஷ்மீரைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தவறான உறவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மேஜர் மீது ராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

இதையடுத்து ராஷ்ட்ரிய ரைபிள் படை பிரிவில் 2016 மார்ச் முதல் பணியாற்றிய அவர் கடந்த அக்டோபர் 2018ம் ஆண்டு வரை அதே பிரிவில் பணியாற்றி காஷ்மீரில் தங்கி விசாரணையை எதிர்கொண்டார்.
விசாரணையின் முடிவில் மேஜர் லத்துல் கோகாய் மீதான தவறு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடைய சீனியாரிட்டியை ரத்து செய்த ராணுவ நீதிமன்றம், 6 மாதங்கள் பென்சனையும் ரத்து செய்தது. மேலும் முக்கியத்துவம் இல்லாத சாதாரண பொறுப்பில், காஷ்மீர் மாநிலத்தை விட்டு வேறு இடத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக மேஜர் லத்துல் கோகாய் பதவி உயர்வை இழந்துள்ளார்.
இனி இரண்டரை வருடங்கள் அவர் முக்கியத்துவம் இல்லாத துறையில் பணியாற்றுவார் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications