சந்திரபாபு நாயுடுவை கொல்ல 6 முறை ஒத்திகை பார்த்த மாவோயிஸ்டுகள்
டெல்லி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் ஒத்திகை நடத்தியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஆந்திரா, ஒடிஷா எல்லையில் உள்ள மல்கான்கிரி மாவட்டத்தில் இருக்கும் ராம்குர்ஹா காட்டுப்பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி 7 பெண்கள் உள்பட 30 மாவோயிஸ்டுகளை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

அதற்கு பழி வாங்கும் விதமாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக அவர்கள் டெல்லியில் உள்ள மாநில அரசுக்கு சொந்தமான ஆந்திர பவனில் மக்களோடு மக்களாக ஊடுருவியுள்ளனர். அவரை கொலை செய்ய 6 முறை ஒத்திகையும் செய்துள்ளதை மத்திய உளவுத் துறை கண்டுபிடித்துள்ளது.
இது குறித்து டெல்லி போலீசார் மற்றும் மத்திய உளவுத் துறை ஆந்திர போலீசாரை எச்சரித்துள்ளனர். சந்திரபாபு நாயுடு ஆந்திர பவனுக்கு வந்தபோது பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து மாவோயிஸ்டுகளும் மைக் பிடித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2003ம் ஆண்டு அக்டோபர் மாதம் சந்திரபாபு நாயுடு திருப்பதி கோவிலுக்கு சென்றபோது மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணி வெடி தாக்குதலில் அவர் காயம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் உயிருக்கு மாவோயிஸ்டுகளால் மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications