மதர் தெரசாவிற்காக மீண்டும் கால்பந்து விளையாடும் மாரடோனா... கொல்கத்தாவில் களம் இறங்குகிறார்
பிரபல கால்பந்து வீரர் டியகோ மாரடோனா கொல்கத்தாவில் அன்னை தெரசா உருவாக்கிய தொண்டு நிறுவனங்களுக்காக கால்பந்து விளையாட உள்ளார்.
கொல்கத்தா: பிரபல கால்பந்து வீரர் டியகோ மாரடோனா கொல்கத்தாவில் அன்னை தெரசா உருவாக்கிய தொண்டு நிறுவனங்களுக்காக கால்பந்து விளையாட உள்ளார். இதற்காக அவர் தற்போது இந்தியா வந்துள்ளார்.
அவர் கால்பந்து போட்டியில் விளையாடுவது மட்டும் இல்லாமல் இன்னும் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். மேலும் சில கிரிக்கெட் வீரர்களையும் அவர் பார்ப்பதற்கு வழி இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் அவர் கொல்கத்தாவில் தான் சாப்பிடும் உணவுப்பொருட்கள் குறித்தும் பேசி உள்ளார். என்ன மாதிரியான உணவுகள் பிடிக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் மாரடோனா
பிரபல அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மாரடோனா தற்போது இந்தியா வந்துள்ளார். இந்தியாவில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அவர் வந்துள்ளார். இந்த நிலையில் அவர் கொல்கத்தாவில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தங்கி உள்ளார். இது இவரது இரண்டாவது இந்திய பயணம் ஆகும். இதற்கு முன் இவர் கேரளாவில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொள்ள இந்தியா வந்திருந்தார்.

சாப்பாடு
இவர் தங்கியிருக்கும் ஹோட்டலில் இவருக்காக சிறப்பான உணவுகள் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக லத்தின் அமெரிக்காவை சேர்ந்த சமையல்காரர் களம் இறக்கப்பட்டுள்ளார். இவருக்கு பீப் மற்றும் கோழி கறி பிடிக்கும் என்பதால் அதில் நிறைய உணவுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் காரமான உணவுகளும் நிறைய தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

என்ன செய்கிறார்
இவர் முதல் திட்டமாக கொல்கத்தாவில் அன்னை தெரசா நிறுவிய தொண்டு இல்லத்திற்கு செல்ல உள்ளார். அந்த நிறுவனம் நடத்தும் கால்பந்து போட்டியில் கலந்து கொள்வார். இந்த பணம் அந்த தொண்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். இதற்காக பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் மாரடோனா இதில் விளையாடுவது கடைசி நேரத்தில் சந்தேகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

கங்குலியுடன் மோதும் மாரடோனா
தற்போது அவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கங்குலியை சந்திப்பதாக முடிவாகி உள்ளது. கங்குலி நடந்ததும் கால்பந்து போட்டியில் இவர் மரியாதை நிமித்தமாக கலந்து கொள்வார். இது பெரிய அளவில் கால்பந்து குறித்த கருத்தரங்கம் மாதிரி நடக்க இருக்கிறது. மேலும் இதில் சில நிமிடம் மாரடோனா, கங்குலியுடன் விளையாடுவார் என்றும் கூறப்பட்டு உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications