வட்ட வட்ட பவுர்ணமி.. ஆரம்பிச்சிட்டாரு மோடி.. ராமராஜ்ஜியத்துக்கு பாஜக அடித்தளம்.. உ.பி.யில் பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்சாஹர் நகரில் பிரம்மாண்டமான பாஜக தேர்தல் பேரணி இன்று நடக்கிறது.. இந்த பேரணியில் இருந்து மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்க இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்றைய தினம் பௌர்ணமியில் இந்த பிரச்சாரத்தை தொடங்க வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா, கடந்த 22ம் தேதி பிரம்மாண்டமாக நடந்தது.. இதற்கான இந்த சடங்குகள் அனைத்தையுமே பிரதமர் மோடி முன்னின்று செய்தார்.. 5 வயது குழந்தை ராமர் சிலையின் பாதத்தில் பிரதமர் மோடி அமர்ந்து அர்ச்சகர் உதவியுடன் பிரான் பிரதிஷ்டை சடங்குகளை செய்தார்.

Master Strategies in BJP and PM Modi starts campaign for lok sabha elections in Uttar pradesh today

ராமர் சிலை: ராமர் சிலை பிரதிஷ்டைக்காக மொத்தம் 84 வினாடி நேரம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே, 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கண்களில் இருந்த துணி அகற்றப்பட்டது. பால ராமர் சிலையின் கண்களும் திறக்கப்பட்டன.

இந்த கும்பாபிஷேகம் முடிந்ததையடுத்து, உத்தரபிரதேசத்திலுள்ள புலந்த்சாஹரில் இன்று பாஜகவின் பேரணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.. இந்த பேரணி, வரப்போகும் எம்பி தேர்தலுக்கான பிரச்சாரத்தின் தொடக்கமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது..

ஜரூர் வேகம்: இதற்காக, உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பிராந்திய நகரத்தில் கட்சித்தொடண்டர்களும், தலைவர்களும், நிர்வாகிகளும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பிராந்தியத்தை பொறுத்தவரை, கடந்த 2019-ல் நடந்த எம்பி தேர்தலில், மொத்தமுள்ள 14 தொகுதிகளில், பாஜக தேர்தலில் 8 இடங்களில் அபார வெற்றி பெற்று, மெஜாரிட்டியை தக்கவைத்திருக்கிறது. இதே வெற்றியை வரப்போகும் தேர்தலிலும் பெற வேண்டும் என்பதற்கான முயற்சியிலும் இறங்கி வருகிறது. இந்த வெற்றியை பெற, கடுமையாக உழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது..

பிரச்சார பேரணி: அந்தவகையில், இன்றைய தினமே, தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் தொடங்க உள்ளார்.. இந்த பிரமாண்ட பேரணியில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்ளக்கூடும் என தெரிகிறது. அந்தவகையில், இன்றைய பேரணி, பாஜகவுக்கான எழுச்சி பேரணியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், பாஜகவின் வேகம் விஸ்வரூபமெடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.

தேர்தல்: இந்தியாவை பொறுத்தவரை, ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல்களை நடத்துவது வழக்கம்.. அதிலும், மாநிலங்களை பொறுத்து, பல்வேறு கட்டங்களாக தேர்தலை நடத்துவதும் வழக்கம். அந்தவகையில், வரும் ஏப்ரல் 2வது வாரத்தில் தொடங்கி மே மாதத்திற்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி முடிப்பதை இந்தியத் தேர்தல் ஆணையம் வழக்கமாக கொண்டுள்ளது.

அந்தவகையில், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த பணிகளை கடந்த 2 மாதங்களாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாநில தேர்தல் ஆணையர்களுடன் தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் அளித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+