காஷ்மீரில் நீடிக்கும் பதற்றம்.. இரவோடு இரவாக முக்கிய தலைவர்களை சந்தித்த மெகபூபா முப்தி!

காஷ்மீரில் தொடர்ந்து ராணுவம் குவிக்கப்பட்டு நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி இன்று இரவு காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்தார்.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தொடர்ந்து ராணுவம் குவிக்கப்பட்டு நிலையில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி இன்று இரவு காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்தார். முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்த அவர் பின் ஆளுநரையும் சந்தித்தார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அமர்நாத் யாத்திரையை தற்போது மத்திய அரசு தடை செய்துள்ளது. மத்திய அரசு அங்கு யாத்திரை சென்று இருக்கும் பக்தர்களையும் வெளியேற அறிவுறுத்தி உள்ளது

Mehbooba Mufti meets major leaders amidst tension raising in Kashmir

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு புதிதாக 35000 வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். மொத்தமாக அங்கு புதிதாக 75000 வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது ராணுவ குவிப்பு காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

காஷ்மீரில் தொடர்ந்து ராணுவம் குவிக்கப்பட்டு வருவதற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜம்மு காஷ்மீர் ஜனநாயக மக்கள் கட்சியை சேர்ந்தவருமான மெகபூபா முப்தி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மெகபூபா முப்தி இன்று இரவு காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்தார்.

முதலில் இவர் வீட்டை விட்டு வெளியே செல்ல ராணுவத்தினர் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. அதன்பின் அவர் ராணுவத்தினருடன் விவாதம் செய்தார், அதன்பின் அவர் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார். தற்போது இவர் வரிசையாக தலைவர்களை சந்தித்து வருகிறார்.

முதற்கட்டமாக மெகபூபா காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுடன் அவரது வீட்டில் சந்திப்பு நடத்தினார். காஷ்மீரில் நடக்கும் பிரச்சனை குறித்து இருவரும் ஆலோசித்தனர். அதன்பின் இன்னொரு முக்கிய கட்சியான பீப்பிள் கான்பிரன்ஸ் கட்சியின் தலைவர் சஜாத் லோனுடன் சந்திப்பு நடத்தினார். 20 நிமிடம் இவர்கள் பேசினார்கள்.

முக்கிய தலைவர்களை சந்தித்த மெகபூபா பின் காஷ்மீர் ஆளுநரையும் சந்தித்தார். காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் உடன் சந்திப்பு நடத்திய அவர், காஷ்மீரில் நடக்கும் பாதுகாப்பு மாற்றங்கள் குறித்து கேட்டறிந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+