என்ன கொடூரம்.. பாம்பு கடித்து ஐசியூவில் அட்மிட் ஆன சிறுமி.. கட்டி வைத்து சீரழித்த ஐவர்!
ஐசியூ வார்ட்டில் சிகிச்சை பெறும் சிறுமியை கயவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.
உத்திரப்பிரதேசம்: காம கொடூரர்களின் அட்டகாசத்தையும், அக்கிரமத்தையும் குறைக்க ஒரு வழியும் தெரியாமல் போய்விட்டதே????
உத்திரப்பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 5 நாட்களுக்கு முன்பு சிறுமி ஒருத்தி பண்ணையில் வேலை பார்த்து கொண்டிருந்தாள். பண்ணையை சுற்றி நிறைய புதர்கள் இருந்திருக்கிறது. அதனால் அங்கிருந்த ஒரு பாம்பு ஒன்று பண்ணைக்குள் நுழைந்து வேலை பார்த்த சிறுமியை கடித்து விட்டது.

உடனடி சிகிச்சை
வலியால் அலறி துடித்த சிறுமியை உடனடியாக குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமி சேர்க்கப்பட்டாள். உடனடியாக சிகிச்சையும் நடைபெற ஆரம்பித்தது. ஆபத்திலிருந்து உயிர் பிழைத்தாலும் சிறுமி இன்னமும் ஐசியூவில்தான் இருக்கிறாள்.

கட்டாயப்படுத்தி ஊசி
இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இரவு ஐசியூ பிரிவில் உள்ள அறையில் சிறுமி தனியாக தூங்கி கொண்டு இருக்கிறாள். ஐசியூ பிரிவில் ஹாஸ்பிடல் கம்புண்டர் சுனில் ஷர்மா என்பவர் யூனிபார்முடனும் சிறுமி அறைக்குள் நுழைகிறார். அவருடன் வேறு 4 ஆட்கள் என 5 பேருமாக சேர்ந்து சிறுமி அறைக்குள் நுழைந்தனர். தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு ஊசி ஒன்றினை எடுத்து கட்டாயப்படுத்தி போட முயன்றனர்.

கட்டி வைத்து பலாத்காரம்
ஆனால் ஏற்கனவே உடல்நலம் குன்றிய சிறுமியோ அந்த 5 பேரையும் முடிந்தவரை எதிர்த்து போராடி இருக்கிறாள். ஊசி போட முயன்றபோதெல்லாம் கைகளாலேயே தட்டி தட்டி விட்டிருக்கிறாள். இதனால் ஆத்திரம் அடைந்த 5 பேரும் சிறுமியை அந்த கட்டிலோடு கட்டிப் போட்டு பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

சிசிடிவி கேமரா
விரைந்த வந்த போலீசாரும் ஐசியூவில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூரம் நடைபெற்ற நேரத்தில் ஐசியூ பிரிவில் நிறைய நோயாளிகளும் 3 ஹாஸ்பிடல் ஊழியர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு சிறுமி.. அதுவும் பாம்பு கடித்ததால் ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் ஒருத்தியை 5 பேரும் கட்டி வைத்து நாசம் செய்தது உத்திரபிரதேச மாநிலம் அல்லாது நாட்டையே அதிர வைத்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications