மதுபானம் குடித்திருந்தால் வண்டி ஸ்டார்ட் ஆகாது.. விபத்தை தடுக்கும் புது பைக்! கண்டுபிடித்த மாணவர்கள்
போபால்: மது போதையில் வாகனங்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் விபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், விபத்துக்களை தடுக்கும் வகையில் புதிய எலக்ட்ரிக் பைக்கை எம்என்என்ஐடி மாணவர்கள் உருவாக்கி அசத்தியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு மட்டும் குடிபோதையினால் ஏற்பட்ட விபத்துக்களில் சுமார் 3,314 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கடுத்த ஆண்டுகளில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என சமூக செயல்பாட்டாளர்கள் உறுதியாக கூறுகின்றனர். இதுவரை வெளியான தகவல்களின்படி உத்தரப் பிரதேசத்தில் அதிக அளவு இதுபோன்ற விபத்துக்கள் நடக்கின்றன.

எனவே இதனை தடுக்கும் நோக்கில் உத்தரப் பிரதேசத்தின் எம்என்என்ஐடி மாணவர்கள் புதிய வகை எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கியுள்ளனர். குடித்துவிட்டு இந்த பைக்கை ஸ்டார்ட் செய்ய முயன்றால், பைக் ஸ்டார்ட் ஆகாது என்பதே இதன் சிறப்பம்சம். அலகாபாத்தின் எம்என்என்ஐடி மாணவர்களும் ஆட்டோமேட்டிக் என்ஜினியர்ஸ் சொசைடியும் இணைந்து இந்த புதிய வகை பைக்கை உருவாக்கியுள்ளனர்.
இது மற்ற சாதாரண எலக்ட்ரிக் பைக்கை போலதான் இருக்கும். இதன் பேட்ரியை 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 60 கி.மீ வரை ஓட்ட முடியும். அதேபோல, அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்தில் இதில் பயணிக்க முடியும். பைக்கில் ஸ்மோக் சென்சார்கள், ஆல்கஹால் அளவை கண்டறியும் கருவிகளும் இருக்கின்றன. இதுதவிர, பைக்கை திருட முயன்றால் அலாரம் ஒலிக்கும், பைக் விபத்திற்குள்ளானால் அது தானாகவே அவசர உதவி எண்களுக்கு போன் செய்துவிடும். மட்டுமல்லாது மலை போன்ற செங்குத்தான பாதையில் கூட இது எளிதாக ஏறிவிடும்.
MNNIT இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையின் உதவி பேராசிரியரின் மேற்பார்வையில் இந்த பைக் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இம்பீரியல் சொசைட்டி ஆஃப் இன்னோவேடிவ் இன்ஜினியர்ஸ் (ஐஎஸ்ஐஇ) சமீபத்தில் போபாலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்த பைக்கை மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தார்கள். இதில் நாடு முழுவதுமிருந்து வெவ்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் தயாரித்த பைக்குகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
எம்என்என்ஐடி மாணவர்கள், தங்கள் பைக்கை உருவாக்க ரூ.1.30 லட்சம் வரை செலவானதாக கூறியுள்ளனர். இந்த பைக் ஐஎஸ்ஐஇ நிகழ்ச்சியில் 2 விருதுகளை தட்டி சென்றிருக்கிறது. விருது வெல்ல காரணமாக இருந்த மாணவர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்படும் என்று எம்என்என்ஐடி நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இந்த வகை பைக்குகள் சந்தைக்கு வந்தால் மதுபோதையால் ஏற்படும் வாகன விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications