For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'சராசரி அளவுக்கும் கீழாக குறையப் போகும் பருவமழை அளவு'

Google Oneindia Tamil News

டெல்லி: பருவமழை நடப்பாண்டில் சராசரிக்கும் குறைவாகவே பெய்யும். ஆனாலும் "எல் நினோ"வால் பெரிய அளவில் இந்தியாவுக்கு பாதிப்பு இருக்காது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கியுள்ள நிலையில் இந்தாண்டுக்கான பருவமழை குறித்த தகவலை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்.

Monsoon will be reduced this time…

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , "ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென் மேற்கு பருவமழை காலத்தில் 93 முதல் 96 சதவீதம் வரை மழை பெய்யும். இது சராசரியை விட சிறிது குறைவு. இதனால் சில இடங்களில் குறைவான அளவு மழை பெய்யலாம்.

ஜூன் மாதத்தில் 93 சதவீதமாக இருக்கும் மழையின் அளவு ஆகஸ்ட்டில் 96 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பசிபிக் பெருங்கடலில் வெப்ப நிலை அதிகரிப்பதால் ஏற்படும் "எல் நினோ" வால் மழை அளவு குறையும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இதனால் இந்தியாவில் மழை பொழிவில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது" என்று கூறினார்.

English summary
Monsoon rate is this time reduced more, central minister Jitendra Singh. El-Niño didn't affect India more in this time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X