மோடி அலை புஸ்..... ம.பி. லோக்சபா இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி: காங். வேட்பாளர் அபார முன்னிலை!!
போபால்: மத்திய பிரதேசத்தின் ரட்லம் லோக்சபா இடைத்தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சி வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் கந்திலால் பூரியா வென்றுள்ளார். ஆனால் தேவாஸ் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. வென்றுள்ளது.
ம.பி. மாநிலத்தில் ரட்லம்- ஜபூவா லோக்சபா தொகுதிக்கும் தேவாஸ் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
ரட்லம் லோக்சபா தொகுதியானது நீண்டகாலம் காங்கிரஸ் வசம் இருந்த தொகுதி. கடந்த தேர்தலில் இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் திலீப் சிங் பூரியா வெற்றி பெற்றார். இதே திலீப் சிங் பூரியா 1980ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இத்தொகுதியில் 5 முறை வென்றவர். லோக்சபா தேர்தலின் போது பா.ஜ.கவுக்கு தாவினார். மோடி அலையால் வெற்றியும் பெற்றார். ஆனால்,கடந்த ஜூன் மாதம் அவர் காலமானார். இதனால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

கந்திலால் பூரியா வேட்பாளர்
இத்தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் கந்திலால் பூரியாவை வேட்பாளராக நிறுத்தியது காங்கிரஸ். பா.ஜ.கவோ மறைந்த திலீப் சிங்கின் மகளும் எம்.எல்.ஏவுமான நிர்மலா பூரியாவை வேட்பாளராக நிறுத்தியது.

மோடி அலை காலி
இந் நிலையில் இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் இந்தத் தொகுதியில் பாஜக பெரும் தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் கந்திலால் 80,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். லோக்சபா தேர்தலின் போது வீசிய மோடி அலை இப்போது முழுவதுமாக காலாவதி ஆகிவிட்டது என்பதை இந்த தேர்தல் முடிவு வெளிப்படுத்துகிறது.

தேவாஸில் பா.ஜ.க. வெற்றி
அதே போல இந்த மாநிலத்தின் தேவாஸ் சட்டசபை தொகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வாக இருந்த "தேவாஸ்" மன்னர் பரம்பரையைச் சேர்ந்த துகோஜி ராவ் காலமானதால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இங்கு துகோஜி ராவ் மனைவி காயத்ரி ராஜேவை பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தியது.
இத் தொகுதியில் பா.ஜ.க. வென்றுள்ளது. இது அம்மாநில பாஜக முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.

வாரங்கலில்...
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி வென்றது. வாரங்கல் எம்.பி.யாக இருந்த கடியம் ஸ்ரீஹரி தெலுங்கானாவின் துணை முதல்வராக நியமிப்பட்ட நிலையில் தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கடந்த 21-ந் தேதியன்று இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் பசுனூரி தயாகர்; காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சத்தியநாராயணா; தெலுங்குதேசம்- பா.ஜ.க. கூட்டணியில் பா.ஜ.கவின் தேவ்யா ஆகியோர் போட்டியிட்டனர். இன்றைய வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பசுனூரி தயாகர் மொத்த 6,15, 544 வாக்குகளைப் பெற்றார். காங்கிரஸ் கட்சியின் சத்தியநாரயணா, 1,56,315 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால் பசுனூர் சுமார் 4,59,229 வாக்குகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளார். பா.ஜ.கவின் தேவ்யா 1,29,868 வாக்குகள் பெற்று 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தெலுங்கானா மக்கள் முதல்வர் சந்திரசேகர ராவ் மீது அபரிதமான நம்பிக்கை வைத்திருப்பதையே இத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications