கணவர் அடித்து கொலை.. பலாத்காரம் செய்யப்பட்ட மனைவி.. கணவர் உடலுடன் 170 கி.மீ அலைந்த பரிதாபம்!
நண்பனை கொன்று அவரது மனைவியை 2 பேர் பலாத்காரம் செய்துள்ளனர்
Recommended Video
போபால்: கணவனை அடித்தே கொன்றுவிட்டார்கள்.. மனைவியை தூக்கி சென்று கற்பழித்து விட்டார்கள் கயவர்கள்.. கணவர் சடலத்துடன் கிட்டத்தட்ட 170 கிலோ மீட்டர் தூரம் கற்பழிக்கப்பட்ட மனைவி அலைந்து திரிந்த அவலம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் விதிஷா மாவட்டம் ஆலம்பூர் கிராமத்தில் இப்படி ஒரு கொடூரம் நடந்துள்ளது. அங்கு மனைவியுடன் வசித்து வருபவர் ரமேஷ். (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
இந்த தீபாவளியை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார் ரமேஷ். அதனால் நண்பர்கள் அனில் குஷ்வஹா, மனோஜ் அஹிர்வார் ஆகியோரை வீட்டுக்கு வரவழைத்தார.

சீண்டல்
மதுபோதையுடன் விருந்து தடபுடலாக இருந்தது. மண்டை நிறைய போதையும் ஏறிவிட்டது. பிறகு நண்பர்கள் ரமேஷின் மனைவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட ஆரம்பித்தனர். இதை கண்டு அதிர்ந்து போன மனைவி, தன்னை காப்பாற்றி கொள்ள கடுமையாக போராடினார் .

கொலை
ஆனாலும் நண்பர்கள் அவரை வீட்டுக்கு பின்புறம் அலேக்காக தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்றனர். போதையில் இருந்த ரமேஷ் இதை பார்த்ததும் ஷாக் ஆனார். அதனால் மனைவியை நண்பர்களிடம் இருந்து காப்பாற்ற ஓடிவந்தார். ஆனால், நண்பர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். கடைசியில் அடித்தே ரமேஷை கொன்றுவிட்டனர். ஒரு கொலையை செய்துவிட்டோமே என்றுகூட அவர்கள் பதறவில்லை... அதன்பின்னரும், மனைவியை 2 பேரும் கற்பழித்து விட்டே சென்றனர்.

ஆஸ்பத்திரி
தகவலறிந்து போலீசார் வந்துவிட்டனர். சடலமாக ரமேஷ்... குத்துயிரும் கொலையுயிருமாக மனைவி விழுந்துகிடக்க, இருவரையும் மீட்டு ஜீப்பில் ஏற்றி லதேரி பகுதி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் டாக்டர்களே இல்லை.. அதனால், அங்கிருந்து 34 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கும் டாக்டர்கள் இல்லை.

அலைக்கழிப்பு
இதற்குபிறகு அங்கிருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சிரோஞ்ஜி என்ற பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கும் டாக்டர்கள் இல்லை.. இனிமேல்தான் வருவார்கள் என்று சொன்னார்கள். அதனால் 2 மணி நேரம் காத்திருந்தனர்.

சிகிச்சை
அந்த சமயத்தில் ஏற்கனவே சென்றுவந்த லதேரி ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் வந்துவிட்டார்கள் என்ற தகவல் கிடைக்கவும், திரும்பவும் ரமேஷ் உடலையும், மனைவியையும் கொண்டு சென்றனர். அங்கு ரமேஷ் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது. ஆனால் மனைவியை லதேரியில் இருந்து 80 கிலோ மீட்டர் தூரத்தில் பசோடா என்ற பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவலம்
அதாவது இறந்த கணவர் உடலுடன் கிட்டத்தட்ட 170 கிலோ மீட்டர் தூரம் கற்பழிக்கப்பட்ட மனைவி அலைந்துள்ளார். வீட்டுக்கு நம்பி அழைத்த நண்பனை கொன்ற கயவர்கள் தப்பி ஓடிவிட்டதால் அவர்களை தேடி வருகிறார்கள். இறந்த கணவர், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்.. அலைக்கழிக்கப்பட்ட 170 கிமீ தூரம், ஆஸ்பத்திரிகளில் அவசரத்துக்குகூட டாக்டர்கள் இல்லாதது.. என இந்த அவலநிலையை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications