CSK vs SRH தோனி தலைமையில் சிஎஸ்கே வெற்றி: ஜடேஜா தலைமை குறித்து தோனி கூறியது என்ன?
ஐபிஎல் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் தோல்விகளை சந்தித்துவந்தது. இதற்கு முன்புவரை நடந்த 8 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே சிஎஸ்கே வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், கேப்டன் பதவியில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகினார். மீண்டும் சிஎஸ்கே கேப்டனாக தோனி பொறுப்பேற்று முதல் ஆட்டத்திலேயே சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சிஎஸ்கே 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
வெற்றிக்குப் பிறகு ஜடேஜாவின் தலைமை குறித்தும், அவருக்கு என்ன நெருக்கடி இருந்தது என்பது குறித்தும் தோனி பேசியவை டிரெண்டாகி வருகின்றன.
வெற்றி பெற்ற அணியின் கேப்டனாக மேட்ச் முடிந்த பின் பேசிய தோனி, சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது, அதனை ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கியது, பின் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றது என பலவற்றை குறித்து பேசினார்.
இந்த மேட்சுக்கு ஒருநாள் முன்னதாக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஜடேஜா, அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு தோனியை கேட்டுக்கொண்டார். அதனை 'கேப்டன் கூல்' ஏற்றுக்கொண்டார்.
ஒரே இரவில் ஏற்பட்ட இந்த மாற்றம் கிரிக்கெட் உலகிலும் பொதுமக்கள் மத்தியிலும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
இந்த மாற்றம் குறித்து தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு பதில் அளித்த அவர், "இந்த சீசனில் ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்புக்கான வாய்ப்பு வழங்கப்படும் என்பது கடந்தாண்டிலேயே அவருக்கு தெரியும். அதற்காக தயார்படுத்துவதற்கு அவருக்கு போதிய கால அவகாசம் இருந்தது. முதல் இரு மேட்ச்களில் அவருடைய பணியை நான் கண்காணிக்க மட்டுமே செய்தேன். அதன்பிறகு, அவரே முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும், அம்முடிவுகளுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவரிடம் வலியுறுத்தினேன்" என தெரிவித்தார்.
https://twitter.com/ChennaiIPL/status/1520821733506568192
"கேப்டனாக பொறுப்பேற்கும் போது பல விஷயங்களை கவனிக்கவேண்டும் வேண்டும். ஆனால், தொடர் செல்ல செல்ல, கேப்டன் பொறுப்பின் அழுத்தம் அவரது விளையாட்டை பாதிக்க செய்தது.
கேப்டன் பொறுப்பை ஏற்றுச் செய்வது என்பது மெதுவாக நடக்கும் மாற்றம். கேப்டனாக இருக்கும்போது நாம் பலவற்றை கவனிக்க வேண்டியிருக்கும். அதில் ஒன்று உங்களின் விளையாட்டு" என தெரிவித்தார்.
கேப்டன் பொறுப்பின் அழுத்தத்திலிருந்து விடுபட்டதால், ஜடேஜா மீண்டும் புத்துணர்ச்சியுடன் 'ஆல்-ரவுண்ட்'டராக விளையாட்டை தொடர்வார் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்த தோனி, குறிப்பாக 'பீல்டிங்'கில் கவனம் செலுத்துவார் என தெரிவித்தார். இந்த சீசனில் பீல்டிங்கில் மிக மோசமாக உள்ள சிஎஸ்கே, எளிமையான கேட்ச்களை கூட தவறவிட்டது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் இத்தகைய எளிமையான கேட்ச்களை சிஎஸ்கே நழுவவிட்டது.
https://twitter.com/ChennaiIPL/status/1520764996799451136
"இந்த மேட்ச்கள் கடினமானவை, எனினும் நாங்கள் வலுவுடன் திரும்பிவருவோம்" என தெரிவித்தார்.
இந்த சீசனில் ஜடேஜா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்பது முன்னரே திட்டமிடப்பட்டது என்றும் அம்முடிவை தான் ஆதரித்ததாகவும் தோனி கூறினார். மேலும், கேப்டனாக ஜடேஜாவின் முடிவுகளில் தலையிட வேண்டாம் என தான் நினைத்ததாகவும் கூறினார்.
நேற்றைய மேட்ச்சில் முதலாவதாக விளையாடிய சென்னை அணி 202 ரன்களை அடித்தது, இதில் பாதி அதாவது 99 ரன்களை ருதுராஜ் கேய்க்வாட் அடித்தார். டேவன் கான்வே 85 ரன்கள் (நாட் அவுட்) அடித்தார். அடுத்ததாக விளையாடிய ஹைதராபாத் 189 ரன்களை அடித்தது. இதையடுத்து இந்த மேட்ச்சில் 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
"நான் வித்தியாசமாக எதுவும் செய்யவில்லை. கேப்டன் மாறிவிட்டதால் அனைத்துமே மாறிவிட்டது என பொருள் அல்ல" என வெற்றி குறித்து தோனி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களுள் ஒருவராக தோனி உள்ளார். ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 14 ஆண்டுகளாக சென்னை அணியின் கேப்டனாக அவர் உள்ளார்.
ஐபிஎல் தொடர்களை சிஎஸ்கே வெல்ல தோனியின் தலைமைப் பண்பு காரணமாக இருந்ததாக அவர் பலராலும் பாராட்டப்படுகிறார்.
கேப்டனாக இருந்தபோது ஜடேஜாவின் ஆட்டமும் சிறந்ததாக இல்லை என்ற கருத்து உள்ளது. இதுவரை 112 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!

















Click it and Unblock the Notifications