இஸ்லாமிய பெண்கள் 15 வயது நிறைவடைந்தால் திருமணம் செய்துகொள்ளலாம்: குஜராத் உயர்நீதிமன்றம்
அகமதாபாத்: இஸ்லாமிய பெண்கள், 15 வயது நிறைவடைந்தாலே திருமணம் செய்து கொள்ளலாம் என குஜராத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தின் கருத்து அமைந்துள்ளது. சூரத்தை சேர்ந்த யூசுப் லோகத் என்ற இஸ்லாமிய இளைஞர் கடந்த பிப்ரவரி மாதம் 17 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் லோகத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி லோகத் தாக்கல் செய்த மனுவில், குஜராத் நீதிமன்ற நீதிபதி ஜேபி.பர்டிவாலா உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில் பர்சனல் லா ஆஃப் இஸ்லாம் இஸ்லாமிய சட்டத்தின் படி 15 வயது பூர்த்தி அடைந்தாலே அந்த பெண் திருமணம் செய்து கொள்ளலாம் என இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் பெற்றோரின் சம்மதம் இல்லாமல் கூட திருமணம் நடைபெறலாம் என கூறிய அவர், திருமணத்தை பெண் வீட்டாரும் ஒப்புக் கொண்டதால் இந்த வழக்கை மேற்கொண்டு நடத்தும் முகாந்திரம் இல்லை என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications