ராபர்ட் வதேராவை பாடாய் படுத்துகிறார்களே.. வக்காலத்து வாங்கும் பிரியங்கா
ரேபரேலி: தமது கணவர் ராபர் வதேரா மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி பாடாய்படுத்துகின்றனர் என்று சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் பிரசார கூட்டத்தில் பேசிய பிரியங்கா கூறியதாவது:
என் கணவர் வதேரா பற்றி அவதூறு பரப்புகின்றனர். ஆனாலும் என் பாட்டி இந்திராவிடம் இருந்து நாங்கள் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் உண்மை ஒருநாள் வெளியே வந்தே தீரும். வதேரா மீதான நில மோசடி புகார்களில் உச்சநீதிமன்றமே விசாரணை தேவையில்லை என்று சொல்லிவிட்ட பிறகும் அரசியல் சார்ந்த குடும்பத்துடன் தொடர்பு வைத்திருப்பதாலேயே அவரை விமர்சிக்கின்றனர்.

எனது கணவருக்கு எதிராக கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. என் கணவர் தொடர்து அவமதிக்கப்படுகிறார். நான் மிகவும் காயப்பட்டுள்ளேன். அவர்கள் எங்களது குடும்பத்தின் மீது பல ஆண்டுகளாக குறி வைத்து தாக்கி வருகின்றனர்.
தங்களின் அரசியல் லாபத்திற்காக எனது கணவர் ராபர்ட் வதோராவை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனது தாயார் இங்கு பிறக்கவில்லை. ஆனால் அவரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.
இது நமது நாட்டுடைய அழகு. சோனியா காந்திக்காக நீங்கள் வாக்களிக்க வேண்டாம். உங்களுடைய குழந்தைகள் மற்றும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் இந்த நாட்டுக்காகவும் வாக்களியுங்கள்.
இவ்வாறு பிரியங்கா பேசினார்.
பிரியங்காவின் கணவர் ராபர் வதேரா, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதிகாரத்தை பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி தொழில்நிறுவனங்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்த்தார் என்று வதேரா மீது குற்றம்சாட்டப்பட்டு அது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications