Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாகலாந்து சட்டசபை தேர்தல்.. 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்தது.. ஆட்சியை தக்கவைக்குமா பாஜக?

நாகலாந்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ள நிலையில் இன்று 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது.

Subscribe to Oneindia Tamil

கோஹிமா: நாகலாந்தில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக இன்று தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதால் இன்று 59 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணியுடன் முடிவடைந்தது. 2003ம் ஆண்டுக்கு பிறகு இங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்காத நிலையில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ஆட்சியை தக்க வைக்க பாஜக கூட்டணியும், மீண்டும் செல்வாக்கை நிரூபிக்க காங்கிரஸ் கட்சியும் போராடி வருகிறது.

2023ல் மொத்தம் 9 மாநிலங்கள் சட்டசபை தேர்தலை சந்திக்கின்றன. அதன்படி இந்த ஆண்டு மேகாலயா, நாகலாந்து, திரிபுரா, மிசோராம், கர்நாடகா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்கின்றன.

முதற்கட்டமாக வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகியவற்றுக்கு கடந்த மாதம் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. இதில் திரிபுராவில் பிப்ரவரி 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. நாகலாந்து, மேகாலயாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

நாகலாந்தில் பாஜக ஆட்சி

நாகலாந்தில் பாஜக ஆட்சி

நாகலாந்தை பொறுத்தமட்டில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். தற்போது அங்கு பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி(என்டிபிஎப்) கட்சியின் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சியை கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. என்பிஎப் கட்சிக்கு 26 எம்எல்ஏக்கள், பாஜகவுக்கு 12 எம்எல்ஏக்கள் உள்ளன. நைபியு ரியோ முதலமைச்சராக உள்ளார். கடந்த 2003ம் ஆண்டு வரை இங்கு காங்கிரஸ் ஆட்சி நடந்த நிலையில் அதன்பிறகு அக்கட்சி சரிவை சந்திக்க தொடங்கியது. தற்போதைய சூழலில் நாகலாந்தில் காங்கிரஸ் எம்எல்ஏ இல்லாத நிலை உள்ளது.

 களத்தில் 183 வேட்பாளர்கள்

களத்தில் 183 வேட்பாளர்கள்

இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜக, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி அல்லது என்டிபிஎப் கட்சிகள் பிரசாரம் செய்து வந்தன. இந்த கூட்டணியை பொறுத்தமட்டில் என்டிபிஎப் கட்சி 40 இடங்களில், பாஜக மொத்தம் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி, என்பிபி கட்சி தலா 12 வேட்பாளர்கள், ஐக்கிய ஜனதாதளம் 7 வேட்பாளர்கள், ஆர்ஜேடி 3 வேட்பாளர்களையும் நிறுத்தி உள்ளது. லோக் ஜன்சக்தி கட்சி (ராம் விலாஸ்) 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்திய குடியரசு கட்சி (அதாவலா) 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதுதவிர 9 வேட்பாளர்கள் சுயேச்சையாகவும், இன்னும் சில சிறிய கட்சிகளும் போட்டியிட்டுள்ளனர்.

துவங்கிய ஓட்டுப்பதிவு

துவங்கிய ஓட்டுப்பதிவு

இந்நிலையில் தான் இன்று நாகலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது. நாகலாந்தில் அகுலுடோ சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கெகஷே சுமி வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் பாஜக சார்பில் அங்கு போட்டியிட்ட கசெட்டோ கிமினி வெற்றி பெற்றார். இந்த தொகுதியை தவிர்த்து மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. மாலை 4 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது.

12.97 லட்சம் வாக்காளர்கள்

12.97 லட்சம் வாக்காளர்கள்

மாநிலத்தில் மொத்தம் 13 லட்சத்து 17 ஆயிரத்து 632 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 6 லட்சத்து 61 ஆயிரத்து 489 பேர் ஆண்களாகவும், 6 லட்சத்து 56 ஆயிரத்து 143 பேர் பெண் வாக்காளர்களாவும் உள்ளனர். ஒரு தொகுதியில் போட்டியின்றி வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இன்றைய தேர்தலில் 12,97,399 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி உடையவர்களாக உள்ளனர். இதில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 523 பேர் ஆண் வாக்காளர்களாகவும், 6 லட்சத்து 49 ஆயிரத்து 876 பேர் பெண் வாக்காளர்களாகவும் உள்ளனர். மொத்தம் 2,291 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 பலத்த பாதுகாப்பு

பலத்த பாதுகாப்பு

ஏற்பாடு இந்த மையங்களில் போலீசார், துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முன்னதாக நாகலாந்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+