கங்கை கரையில் தூர்வாரி சுத்தப்படுத்தினார் பிரதமர் மோடி
வாரணாசி: நாட்டின் அதிநவீன நகரங்களில் ஒன்றாக காசி மாற்றப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது லோக்சபா தொகுதியான வாரணாசிக்கு நேற்று வருகை தந்திருந்தார். இன்று அவர் மீண்டும் வாரணாசி வந்து கங்கையை சுத்தப்படுத்தும் பணிகளை துவக்கி வைத்தார். மண்வெட்டியை எடுத்து கங்கை கரையை தூர்வார அதை பிற தன்னார்வலர்கள் எடுத்துச் சென்று வேறு இடத்தில் கொட்டினர். இதன்பிறகு மோடி கங்கைக்கு சிறப்பு பூஜைகளும் செய்து நாடு செழிக்க பிரார்த்தனை செய்தார்.

மேலும் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கற்பதற்கும் பக்தி சுற்றுலாவுக்குமான தலைநகரமாக வாரணாசி நகரம் மாறவுள்ளது. அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த உலத்தரம் வாய்ந்த வசதிகள் இந்த நகரத்தில் ஏற்படுத்தப்படும்.
மேலும், கண்ணுக்கினிய வகையில் கங்கை கரையின் ஓரத்தில் விளக்குகள் அமைக்கப்படும். அதேவேளையில், இந்த நகரத்தில் உள்ள மின்சார வயர்கள் அகற்றப்படும். பஞ்சகாஷி யாத்திர பாதையின் சாலைகள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு தெருவிளக்குகள் முகாம்கள் உள்ளிட்டவைகள் அமைக்கப்படும்.
எனது ஆறு மாத ஆட்சி காலத்தில், ஏன் இந்த நாடு இந்த நிலையில் உள்ளது என்பதை கண்டறிந்து ஆச்சர்யப்பட்டேன். இந்தியா அனைத்து திறன்கள் மற்றும் ஆற்றலை கொண்டுள்ளது. ஆனால் நாம் எதையுமே சாதிக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் கங்கையை சுத்தப்படுத்தும் பணியில் இணையுமாறு உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு மோடி வேண்டுகோள் விடுத்தார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications