மோடி விரும்பினால் சேர்ந்து வாழ தயார்... 'மனைவி' யசோதாபென் விருப்பம்!
காந்திநகர்: நரேந்திர மோடி சம்மதித்தால் சேர்ந்து வாழ தயார் என்று அவரது மனைவி யசோதாபென் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மோடிக்கும் யசோதாபென்னுக்கும் கடந்த 1968ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது அவர்களுக்கு பதின்ம வயதுதான். திருமணம் ஆன ஓரிரு மாதங்களிலேயே மனைவியை விட்டு மோடி பிரிந்து விட்டார். ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்று விட்ட 62 வயதான யசோதாபென், குஜராத் மாநிலம் மெசானா மாவட்டம் ஈஸ்வர்வாடா கிராமத்தில் தன்னுடைய இரு சகோதரர்களுடன் வசித்து வருகிறார்.

ஆனால், பிரதமர் மோடி திருமணம் ஆனவரா? இல்லையா? என்று நீண்ட காலமாக யாருக்கும் தெரியாமல் இருந்தது. நாடாளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் வடோதரா தொகுதியில் மோடி போட்டியிட்டார். அப்ப்போது, வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், மனைவி என்ற இடத்தில் யசோதாபென் என்று மோடி குறிப்பிட்டு இருந்தார். அதன்பிறகுதான், அவர் திருமணம் ஆனவர் என்று அனைவருக்கும் தெரிய வந்தது.
மோடி பிரதமராக பதவி ஏற்றபின் அவரது மனைவி என்பதற்காக யசோதாபென்னுக்கு கருப்பு பூனைப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், யசோதாபென் ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், '' நரேந்திர மோடி தயார் என்றால், அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். அவர் என்னை அழைத்து செல்ல வந்தால், அவருடன் செல்லத் தயாராக உள்ளேன்" என்று கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications