டீக்கடையில் பிரசாரம் செய்கிறார் மோடி... அய்யர் பேச்சுக்கு பதிலடி!
டெல்லி: டீ விற்ற நரேந்திர மோடி பிரதமராக முடியாது என்று பேசிய மணிசங்கர அய்யரின் பேச்சுக்குப் பதிலடி தரும் வகையில் டீக்கடையில் பிரசாரம் செய்யவுள்ளார் நரேந்திர மோடி. அதேபோல நாடு முழுவதும் 1000 இடங்களில்
டீக்கடைகளில் பாஜகவினரும் பிரசாரம் செய்யவுள்ளனர்.
மணிசங்கர அய்யர் பேசிய பேச்சுக்குப் பதிலடி தரும் வகையில் இந்த டீக்கடை பிரசாரத்தை பாஜக கையில் எடுக்கிறது. குஜராத் மாநிலம் காந்தி நகரில் ஒரு டீக்கடையில் இந்தப் பிரசாரத்தைத் தொடங்கி வைக்கிறார் மோடி. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் டீக்கடைகளில் பாஜகவினர் பிரசாரம் செய்யவுள்ளனர்.

மொத்தம் 1000 இடங்களில் இந்த டீக்கடைப் பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளதாம் பாஜக. இந்த பிரசாரம் நடைபெறும் நாள், நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
முன்னதாக டெல்லியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட மணிசங்கர அய்யர் பேசுகையில், மோடியால் இந்த 21வது நூற்றாண்டில் பிரதமராக முடியாது. ஆனால் அவர் டீ விற்க விரும்பினால் இங்கு வந்து அதைச் செய்யலாம். அதற்கு நாங்கள் ஸ்டால் போட்டுக் கொடுக்கத் தயார் என்று கூறியிருந்தார்.
அய்யரின் பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் அய்யர் பேச்சை அப்படியே காங்கிரஸுக்கு எதிராக திருப்பி விடும் வகையில் டீக்கடைப் பிரசாரத்தைக் கையில் எடுத்துள்ளது பாஜக.












Click it and Unblock the Notifications