டெல்லியில் கோலாகலமான 66வது குடியரசு தின விழா- சிறப்பு விருந்தினராக ஒபாமா பங்கேற்றார்
டெல்லி: நாட்டின் 66-வது குடியரசு தின விழா டெல்லியில் கோலாகலமாக இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமெரிக்கா அதிபர் பாரக் ஒபாமா பங்கேற்ற்றார்.

டெல்லியில் இன்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் குடியரசு தின நிகழ்ச்சிகள் சற்று தாமதமாகத் தொடங்கியது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு முதலில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா கேட்டில் உள்ள போர் வீரர்களின் நினைவுச் சின்னமான அமர்ஜவான் ஜோதியில் அஞ்சலி செலுத்தினார். கடந்த சுதந்திர தினத்தைப் போல இம்முறை தலைப்பாகை அணிந்து வந்தார் பிரதமர் நரேந்திர மோடி
பின்னர் குடியரசு தின விழா நடைபெறும் இடத்துக்கு பிரதமர் மோடி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதலில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி வருகை தந்தார்.

அவரைத் தொடர்ந்து குடியரசு தின விழா சிறப்பு விருந்தினரான அமெரிக்கா அதிபர் பராக் ஒபாமா மனைவியுடன் தமது தனி வாகனத்தில் வருகை தந்தார். பொதுவாக குடியரசு தின விழாவுக்கு வருகை தரும் சிறப்பு விருந்தினர் ஜனாதிபதியின் வாகனத்தில் அழைத்துவரப்படுவது வழக்கம்.
ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒபாமா, அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட தமது பீஸ்ட் வாகனத்தில் வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகை தந்தார்.

விழா மேடையில் 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி. பின்னர் தீவிரவாதிகளுடனான போரில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் உள்ளிடோருக்கு நாட்டின் உயரிய விருதான அசோக சக்ரா விருதை ஜனாதிபதி வழங்கினார். அதனைத் தொடர்ந்து நாட்டின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றார்.
அண்மையில் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட நவீன ஏவுகணைகள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போர்க்கப்பல்களின் மாதிரி வடிவமைப்புகள் இந்த அணிவகுப்பில் இடம் பெற்றன. மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் அலங்கார ஊர்திகளும், பல்வேறு மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளும் இதில் பங்கேற்றன.
இந்த குடியரசு தின விழாவில் முக்கியத் தலைவர்கள் பலரும் பங்கேற்றதால் டெல்லியில் வரலாறு காணாத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications