நாகாலாந்து முதல்வராக நெய்பியூ ரியோ பதவியேற்பு
நாகாலாந்து முதல்வராக நெய்பியூ ரியோ இன்று பதவியேற்றார்.
கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தின் முதல்வராக தேசியவாத ஜனநாயக முன்னேற்ற கட்சியின் (என்டிபிபி) தலைவர் நெய்பியூ ரியோ இன்று பதவியேற்றார்.
நாகாலாந்து சட்டசபை தேர்தலில் என்டிபிபி-பாஜக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. இதையடுத்து என்டிபிபி ஆட்சி அமைக்க ஆளுநர் பிபி ஆச்சார்யாவிடம் உரிமை கோரியது.

இதை ஏற்று என்டிபிபி தலைவர் நெய்பியூ ரியோவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். தலைநகர் கோஹிமாவில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வராக நெய்பியூ ரியோ பதவியேற்றார். அவருடன் 11 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங், அருணாச்சல் முதல்வர் பேமா காண்டு, அஸ்ஸாம் முதல்வர் சர்பானாந்தா சோனோவால், மேகாலயா முதல்வர் கொன்ராட் சங்மா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications