ஹரியானாவில் இமாலய வெற்றி.. அடித்து நொறுக்கும் காங்கிரஸ்.. பாஜக ரொம்ப மோசம்.. நியூஸ் 24 எக்ஸிட் போல்
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இப்போது எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் நியூஸ் 24 நடத்திய எக்ஸிட் போல் முடிவுகளில் காங்கிரஸ் நிச்சயம் வென்று ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆளும் கட்சியாகத் தேர்தலை எதிர்கொண்ட பாஜக மோசமான தோல்வியைத் தழுவும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் இப்போது நயாப் சிங் சைனி முதல்வராக இருக்கிறார். அங்குள்ள 90 இடங்களுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. அங்கு மாலை 5 மணி வரை சுமார் 61% வாக்குகள் பதிவாகியுள்ளது.

வெற்றி யாருக்கு: அங்குக் காங்கிரஸ் கட்சி இந்த முறை ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தேர்தலை எதிர்கொள்கிறது. இதற்கிடையே ஹரியானா மாநிலத்திற்கான நியூஸ் 24 எக்ஸிட் போல் சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
அதில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இப்போது ஆளும் கட்சியாகத் தேர்தலைச் சந்தித்த பாஜகவால் அதிகபட்சம் 32 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள சூழல் என்ன: ஹரியானாவில் மொத்தம் 90 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கு 46 இடங்களில் வெல்லும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும். இந்த முறை அங்குக் காங்கிரஸ் 52- 64 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று நியூஸ் 24 எக்ஸிட் போல் சர்வே தெரிவித்துள்ளது. மறுபுறம் பாஜகவால் 22-32 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகளால் அதிகபட்சம் 5 இடங்களில் வெல்ல முடியும் என்று இந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு: தற்போது வரை வெளியான கிட்டதட்ட அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளில் பாஜக ஆட்சியை இழப்பது உறுதி என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அங்குப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று எக்ஸிட் போல்களில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இதை ஒட்டியே அமைந்தால் காங்கிரஸ் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு ஆட்சியைப் பிடிக்கும்.
பாஜக மீது கோபம் ஏன்: கடந்த லோக்சபா தேர்தலிலாவது ஹரியானாவில் பாஜக கணிசமான இடங்களில் (10 இடங்களில் போட்டியிட்டு 5இல் வெற்றி) வென்றது. ஆனால், இந்த முறை பாஜக நிலை அங்கு ரொம்பவே மோசமாகவே இருக்கிறது. மக்கள் தற்போதுள்ள ஹரியானா மாநில பாஜக அரசு மீது அதிருப்தியில் உள்ளதே இதற்கு முக்கிய காரணம். விவசாய போராட்டங்கள், அக்னி வீர், விளையாட்டு வீரர்கள் போராட்டத்தைக் கையாண்ட விதம் பாஜகவுக்குக் கெட்ட பெயரை வாங்கி கொடுத்துள்ளது.
மேலும், அங்கு வேலையின்மையும் இப்போது பெரிய பிரச்சினையாக மாறிவிட்டதாம். தேசிய தலைநகர் பகுதியில் உள்ள குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் வேலை கிடைத்தாலும் ஹரியானாவின் இதர பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை அதிகமாகவே இருக்கிறது. இதனால் ஹரியானாவில் உள்ள இளைஞர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியும் சரியாக இதை எல்லாம் முன்வைத்தே பிரச்சாரம் செய்தது. இதுவே காங்கிரஸ் கட்சி வெல்ல ஹரியானாவில் காரணமாக உள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications