பாஜகவிற்கும், மம்தா கட்சிக்கும் மோதல்! மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையில்லை: எக்ஸிட் போல்
மேகாலயாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று India Today Axis My India எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
ஷில்லாங்: மேகாலயாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று India Today Axis My India எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. தேசிய மக்கள் கட்சி 18-24, காங்கிரஸ் கட்சி 6-12, பாஜக 4-8, பிற கட்சிகள் 4-8 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக இந்தியா டுடே ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் சட்டசபைகளின் ஆட்சிக்காலம் முடிவடைவதால் இந்த மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது.
இந்த அறிவிப்பின் படி மேகாலயாவில் இன்று (பிப்.27) வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மேகாலயாவில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

மேகாலயா தேர்தல்
வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் விறுவிறுப்பாக தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.நீண்ட வரிசையில் இன்று வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றியதை காண முடிந்தது. மேகாலயாவை பொறுத்தவரை மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஆனால், இன்று 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. ஏனெனில், சோகியாங் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான லிங்டோவின் திடீர் மரணத்தால் அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

வாக்குப்பதிவு நிறைவு
மேகாலயத்தில் தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக கன்ராட் சங்மா பதவி வகித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக இவரது கூட்டணி அரசில் இடம்பிடித்திருந்த பாரதிய ஜனதா இந்த தேர்தலில் தனித்து களம் இறங்கியுள்ளது. பாஜகவிற்கு ஆதரவாக பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். அதேபோல காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும், மாநிலத்தை சேர்ந்த சிறிய கட்சிகளும் கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது.

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது
இந்த நிலையில், வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இன்று இரவு 7 மணியளவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்று இந்தியா டுடே ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. தேசிய மக்கள் கட்சி 18-24, காங்கிரஸ் கட்சி 6-12, பாஜக 4-8, பிற கட்சிகள் 4-8 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக இந்தியா டுடே ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

மீண்டும் கூட்டணி ஆட்சியே
60 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மேகாலாயாவில் தனிப்பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை. எனவே அங்கு மீண்டும் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு உள்ளது. மேகாலயத்தில் தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக கன்ராட் சங்மா பதவி வகித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக இவரது கூட்டணி அரசில் இடம்பிடித்திருந்த பாரதிய ஜனதா இந்த தேர்தலில் தனித்து களம் இறங்கியுள்ளது. இந்த முறை எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்று Matrize கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதனால், தொங்கு சட்ட சபை அமைந்து மீண்டும் கூட்டணி ஆட்சியே அங்கு அமையும் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications