ஜெ. வழக்கில் அப்பீல் செய்யாவிட்டால் ஊழலை ஊக்குவிப்பதுபோல ஆகிவிடும்: ஆச்சாரியா
பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு அப்பீலுக்கு செல்லாவிட்டால், அது ஊழலுக்கு வக்காலத்து வாங்குவது போன்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்திவிடும் என்று சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா, கர்நாடக அரசுக்கு கொடுத்த சிபாரிசில் கூறியுள்ளாராம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடக ஹைகோர்ட் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து தீர்ப்பை ஆய்வு செய்த சிறப்பு வக்கீல் ஆச்சாரியா, இந்த வழக்கு, மேல்முறையீடுக்கு ஏற்றது என்று கூறி, கர்நாடக அரசுக்கு சிபாரிசு அளித்தார்.

சிபாரிசு விவரம் கசிவு
அந்த சிபாரிசு விவரங்களை முழுமையாக வெளியே சொல்ல முடியாது என்று ஆச்சாரியா மறுத்துவிட்டார். ஆனால், அரசுக்கு அவர் அளித்த சிபாரிசின் சில முக்கிய விவகாரங்கள் வெளியே கசித்துள்ளன. அதுகுறித்து கூறப்படுவதாவது: இந்த வழக்கில், கர்நாடகம் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

மேல்மட்ட ஊழல்
மேல்முறையீடு செய்தால்தான், கர்நாடக அரசு, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அரசு என்று மக்களுக்கு தெரியும். அப்படி, மேல்முறையீடு செய்வதை தவிர்த்தால், மேல்மட்டத்தில் உள்ளவர்கள் ஊழல் செய்ய இது தூண்டுகோலாக அமைந்துவிடும்.

ஹைகோர்ட் கருத்தில் எடுக்கவில்லை
கணிதத்தில் ஏற்பட்ட தவறால், ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால், சொத்துக்குவிப்பால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. கீழ்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பு விவாதத்துக்கு அப்பாற்பட்டது. ஆனால், ஹைகோர்ட்டோ, ஜெயலலிதாவின் பல்வேறு சொத்துக்களை, கருத்தில் எடுக்கவேயில்லை. கட்டுமானம், திருமணச் செலவு மற்றும் ஒரு சில வருவாய் போன்ற அம்சங்களை மட்டுமே கருத்தில் எடுத்து, மேலோட்டமாக தீர்ப்பை கூறிவிட்டது.

ஹைகோர்ட் கண்டுகொள்ளவில்லை
மேலும், கர்நாடக அரசின் எழுத்துப்பூர்வ வாதத்தை முழுமையாக படித்து பார்த்து தீர்ப்பளிக்குமாறு, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. இவ்வாறு ஆச்சாரியா தனது சிபாரிசில் கூறியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications