பிரதமராக மட்டுமல்ல.. முதல்வராக இருந்த போதுகூட என் குடும்பத்துக்காக வாழ்ந்தது இல்லை..மோடி உருக்கம்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பிரதமராக இருக்கும் இப்போது மட்டுமல்ல, குஜராத் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கூட நான், எனக்காகவோ, என் குடும்பத்திற்காகவோ வாழ்ந்தது இல்லை என பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக தெரிவித்தார்.

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 6 கட்டங்களாக நடந்து முடிந்துவிட்டது. கடைசி கட்ட தேர்தல் வரும் மே 19ம்தேதி பீகார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள மீதமுள்ள தொகுதிகளுக்கு நடக்க உள்ளது.

Not for once have I lived for myself or my family during my tenure as Gujarat CM and PM: PM Modi

இந்த தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

இன்று பீகார் மாநிலம் சாசராமில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில். "6 கட்டங்களாக நடந்த தேர்தலில் கிடைத்த ரெஸ்பான்ஸ் காரணமாக, ஏழாம் கட்ட தேர்தலில் என் மீது எதிர்க்கட்சிகள் கோபத்தின் உச்சத்தில் இருக்கின்றன.

இப்போது பிரதமராக இருக்கும் போது மட்டுமல்ல, குஜராத் முதல்வராக இருந்த போதும் கூட, நான் எனக்காகவோ, என் குடும்பத்திற்காகவோ வாழ்ந்தது இல்லை. நாட்டு மக்கள் தான் என் குடும்பம். அவர்களுக்காகவே வாழ்கிறேன். எப்படியும் வெற்றி பெறப்போவது இல்லை என்பது எதிர்க்கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் என்னை இப்படி திட்டி அதன் மூலம் திருப்தி அடைகிறார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+