For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீனவர் பிரச்சனைக்கு பேச்சு மூலம் தீர்வு- ஈழத் தமிழர் மீது அக்கறை இல்லை என்பது உண்மை இல்லை: மன்மோகன்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்றும் ஈழத் தமிழர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்று கூறப்படுவது உண்மை அல்ல என்றும் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தமிழக மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது; ஈழத் தமிழர் பிரச்சனையில் அக்கறை இல்லாமல் மத்திய அரசு இருக்கிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

Not trune we are not concerned Eealm Tamils: Manmohan Singh

இதற்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன்சிங், ஈழத் தமிழர் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பது உண்மை இல்லை. ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறோம்.

மீனவர்கள் பிரச்சனை குறித்து இலங்கை அரசுடன் நாங்கள் பேசி வருகிறோம். இலங்கையின் வடக்கு பகுதியில் மீனவர்களும் தமிழக மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என நம்புகிறோம் என்றார்.

English summary
Prime Minister Manmohan Singh said, It is not true that we are not concerned about the well being of tamil population in Sri Lanka. we have always made efforts to convince the Sri lankan govt to address the genuine problems of the tamil population and we will continue to do so. As far as fishermen is concerned, we have discussed the problem with the sri lankan govt. we feel there is a opportunity for tamil population in sri lanka and TN to work out a solution for the fishermen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X