"பெல்லட்" துப்பாக்கியை தடை செய்யுங்கள் மோடி.. ஒமர் நேரில் கோரிக்கை
டெல்லி: அப்பாவி மக்களை துளைத்தெடுத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் "பெல்லட் துப்பாக்கி"க்கு காஷ்மீரில் தடை விதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை டெல்லியில் இன்று சந்தித்த காஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியினற் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக ஒமர் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் தங்கி காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து காஷ்மீர் கலவரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க கோரிக்கை வைத்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று மோடியிடம் பெல்லட் துப்பாக்கியை தடை செய்யக் கோரியுள்ளனர்.

மோடியை சந்தித்து பேசிய காஷ்மீர் எதிர்க்கட்சியினர், காஷ்மீர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தால் பல உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளதை எடுத்துக் கூறினார்கள். காஷ்மீரின் இந்த நிலைக்கு காரணம் அரசியல் ரீதியாக நடவடிக்கை எடுக்காததுதான் என்பதை மோடியிடம் ஒமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காஷ்மீரில் நடந்து வரும் கலவரத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என்றும் பிரதமர் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மோடியுடனான சந்திப்பின் போது காஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
காஷ்மீரில் நடைபெறும் மோதல்களின்போது துப்பாக்கிச் சூட்டில் பல அப்பாவிச் சிறுவர்கள்தான் பெருமளவில் பாதிப்படைவதாக கூறப்படுகறது.












Click it and Unblock the Notifications