''அரசியல் வாரிசும் வேண்டாம் மதவாதியும் வேண்டாம் தலையில் மப்ளர் கட்டினா ஓகே''
டெல்லி: ஒருவர் மதவாதி, இன்னொருவர் அரசியல் வாரிசு. இதுதான் ராகுல் காந்தி மற்றும் நரேந்திர மோடி குறித்து டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய வர்ணனை ஆகும். இந்தக் காரணத்திற்காகத்தான் இவர்கள் இருவரும் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் இவர் விளக்கம் தருகிறார்.
இக்காரணங்களுக்காகதான் "கண்டிப்பாக தோற்கடிக்கப்பட வேண்டிய அரசியல்வாதிகள்" பட்டியலில் இவர்களையும் சேர்த்திருப்பதாகவும் கெஜ்ரிவால் கூறுகிறார்.

அரசியலில் இதெல்லாம் சகஜம்:
என்டிடிவி தொலைக்காட்சிக்கு அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், "ஒருவர் அரசியல் வாரிசாக இருக்கிறார். இன்னொருவர் மதவாதியாக இருக்கிறார்" என்றார் கெஜ்ரிவால்.

கட்சிப்பட்டியலின் கதை:
மேலும் அவர் கூறுகையில், " எங்களது கட்சி வெளியிட்ட தலைவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் நான்கு காரணிகளுக்காக அதில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒன்று ஊழல், இன்னொன்று குற்றவாளிகள், 3வது மதவாதம், நான்காவது அரசியல் வாரிசு" என்றார்.

தலைவர்கள் பட்டியல்:
டெல்லியில் சில வாரங்களுக்கு முன்புதான் ஒரு பெரிய தலைவர்கள் பட்டியலை வெளியி்ட்டது கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி என்பது நினைவிருக்கிறதல்லவா...

எதிர்க்கும் காங்கிரஸ்:
இதில் ராகுல் காந்தி பெயர் சேர்க்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் இப்படி ஒரு விளக்கம் அளித்துள்ளார் கெஜ்ரிவால்.

நமட்டு சிரிப்பா,நமத்து போகபோகும் சிரிப்பா:
நரேந்திர மோடிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவீர்களா என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு கெஜ்ரிவால் சிரித்தபடி பதிலளிக்கையில், " மோடி லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறாரா? இது ஊகமான கேள்வி, பதிலளிக்க முடியாது" என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications